பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 காட்சி 7 இராமன், சீதை, இலக்குவன் இராமன்: என்ன எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டாயா? சீதை: இன்னும் கொஞ்சநேரம். தலையைச் சரியா கவே வாரிக் கொள்ளவில்லை, இராமன்: வாரவே முடியாது. சரியாக வாரிக்கொண் டேன் என்று எந்தப் பெண்ணும் சொல்ல மாட்டாள். சொல்ல முடியாது. நீ வர வேண்டியதில்லை. சீதை: ஏன்? எனக்கு. இராமன்: இல்லை. உனக்குப் பாதி இடம் இல்லை. சீதை: அப்பொழுது சிம்மாதனத்தில் பெண்கள் இருக்கக்கூடாது என்று யாராவது புதுச்சட்டம் இராமன்: மனைவி பேச்சைக் கேட்டு ஆட்சி நடத்து கிறேன் என்பார்கள். சீதை: அப்பொழுது எனக்கு அங்கு உட்கார உரிமையே இல்லையா? இராமன்: பதினான்கு ஆண்டுகள் கழித்துத் தான் கிடைக்கும். சீதை: கிழாவியானபிறகு அப்பொழுது யாரும் உட்கார விரும்பமாட்டார்கள். உட்கார்ந் தாலும் அழகாக இருக்காது. உட்கார வேண்டிய அவசியம் ஏற்படாது. இராமன்: பதினான்கு ஆண்டுகளிலேயே கிழவியாகி விடுவாயா? ஆகமாட்டாய்.