பக்கம்:சொல்லோவியம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

b 104 விற்றிருக்கிறார்கள். நான் சென்னையிலே மட்டும் பத்தாயிரம் ரூபாய்களுக்குக் கைத்தறி, துணிகளைத் தெருத் தெருவாகச் சென்று விற்பனை செய்தேன். அதைப்போலவே அறிஞர் அண்ணா அவர்கள் திருச்சி யிலும்; பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் காரைக்குடியிலும்; தோழர் ஈ.வி.கே சம்பத் அவர்கள் கோவையிலும் துணிகளை விற்று ஒரே நாளில்; ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பெறு மானமுள்ள துணிகளை நாட்டிலே விற்றுக் காட்டி, அதற்கு இருக்கிற மதிப்பை – கைத்தறித் துணி யிடத்தே மக்கள் காட்டவேண்டிய அக்கரையை நாட் டிற்கு வலியுறுத்திச் சொன்னோம். அன்று முதல் கைத்தறித் துணியைத்தான் கூடுமான வரையில் கழகத்திலே உள்ளவர்கள் உடுத்துவது என்கிற வேண்டுகோளையும் விடுத்தோம். - இன்றைய தினம் கைத்தறி நெசவாளர்களுக் காகச் செய்யப்பட்ட திட்டங்களும், தீர்மானங்களும் கேட்பாரற்றுக் கிடக்கின்றன என்பதை நீங்கள் நன்றாக க அறிவீர்கள். இராசகோபாலாச்சாரியார் அவர்கள் மந்திரியாய் இருந்த நேரத்தில் கை கைத்தறி நெசவாளருக்காக நல்லதொரு திட்டமொன்று தீட் டப்பட்டு வடநாட்டு சர்க்காரிடத்திலே வைக்கப் பட்டது. கரைபோட்ட வேட்டியும், சேலையும் கைத் தறி நெசவுக்கே தரப்படவேண்டும்; மில்களுக்குத் தரக்கூடாது; வழங்கப்படக்கூடாது என்கிற யோசனை வடநாட்டுக்குக் கூறப்பட்டது. ஆனால், மத்திய சர்க்கார் அதைக் காதில் போட்டுக்கொள் ளாத காரணத்தால் இன்றைய தினம் ஆலைத் துணி கள், கைத்தறி துணிகளோடு போட்டியிட்டு அதன் ய -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/104&oldid=1703653" இலிருந்து மீள்விக்கப்பட்டது