பக்கம்:சொல்லோவியம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 திராவிட முன்னேற்றக் கழகம், கைத்தறி நெச வாளர்களுடைய பிரச்னையை அடிக்கடி அமைச்சர் களிடத்திலும், சட்டமன்றத்தினரிடமும் எடுத்து எடுத்துச் சொல்லும். அவர்கள் உங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்து தருகிற வரையிலே கோரிக்கைகளைச் சமர்ப்பித்துக் கொண்டேயிருக்கும். அதுபோலவே இந்த வட்டார அதிகாரிகளிடத்தில் - இந்தக் கூட்டத் துத் தலைவர் போன்றவரிடத்தில் - கைத்தறியாளர் களின் கஷ்டங்களை எடுத்துச் சொல்லுவோம். அவர் களோடு கூடி - கலந்துபேசி - கைத்தறியாளர்களின் தொல்லைகளை நீக்கப்பாடுபடுவோம் என்று இவ்விழா வில் உறுதி கூறுகிறேன். 6 6 ய குதிரை கீழே தள்ளியதுமல்லாமல் குழியும் பறித்தது" என்று சொல்லுகிற பழமொழி போல - விசைத்தறி என்கின்ற பெயரால் ஒரு புதிய முறை இன்றைய தினம் கைத்தறி நெசவாளர்களுடைய கழுத்தையறுப்பதற்காகப் புகுத்தப்படுகிறது. அந்த விசைத்தறி புகுத்தப்பட்டால் கைத்தறியையே நம்பி வாழும் ஏராளமான குடும்பங்கள் வேதனைக்குள்ளா கும் என்பது நன்றாகத் தெரிந்து விட்டிருக்கிறது. ஒரு விசைத்தறி புகுத்தப்படுகின்ற நேரத்தில் அத னால் பத்துக் கைத்தறிகள் அழிக்கப்படும் ! நாம் இதை விளக்கமான முறையிலே எடுத்துச் சொல்லியிருக் கிறோம் அரசாங்கத்துக்கு. நாம் மாத்திரமல்ல நாடெங் கிலும் உள்ள கைத்தறி நெசவாளர்கள் அத்தனை பேர் களும் -"விசைத்தறியைப் புகுத்த வேண்டாம்" என்று பொதுக்கூட்டங்கள் மூலமாகவும்; மாநாடுகள் வாயி லாகவும், தலைவர்கள் மூலமாகவும் எடுத்துச்சொல்லி இருக்கிறார்கள். அப்படி எடுத்துச் சொல்லியுங்கூட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/107&oldid=1703656" இலிருந்து மீள்விக்கப்பட்டது