பக்கம்:சொல்லோவியம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 ஆகவேதான், நான் சொல்லுகிறேன், சைத்தறி நெசவாளர்கள் தங்களுடைய குறைகளைத் தீர்த்துக் கொள்ளுவதற்கு இந்த சர்க்காரை மாத்திரம் நம்பிப் பயனில்லை. தங்களுடைய ஒற்றுமையை அதிகமாக வளர்த்துக்கொண்டு, கைத்தறி இயக்கத்தை வலு வோடு வளர்த்துக் கொண்டு, அதன் காரணமாக எழுப்புகின்ற உரிமைக் குரல் மத்திய சர்க்காருடைய காதிலே ஏகமனதாக ஒலிக்கும்படி அவர்களது நெஞ்சிலும் தைக்கும்படிச் செய்யவேண்டும், கின்ற உடைகள் - - ய - மேலும் பொதுமக்கள் காட்டவேண்டிய கடமை ஒன்று உண்டு. கூடுமானவரையில் தாங்கள் உடுக் குடும்பத்திற்கு எடுக்கின்ற ஆடைகள் - நண்பர்களுக்கும் சிபார்சு செய்கின்ற ஆடைகள் - அத்தனையும் கைத்தறி ஆடைகளாகவே இருக்கவேண்டும். கைத்தறி துணிகளாகவே உடுப் போம் என்று உறுதிசெய்துகொண்டு ஒத்துழைப்பை நல்குவார்களே யானால், நிச்சயமாகக் கைத்தறியாளர் களுடைய துயர் துடைப்பதற்கு ஒரு மார்க்கம் கண்ட வர்களாவோம் என்பதைக் கைத்தறி நெசவாளர் களது சார்பாக நான் பொதுமக்களுக்கு சிபார்சு செய்கிறேன். நாம் அவர்களைக் காப்பாற்றவேண்டும். அவர்கள் நம்முடைய மானத்தைக் காப்பாற்றுவார் கள், இன்றைய தினம் அத்தனை பேர்களும் வலுவில் மரணத்தை அணைத்துக்கொள்பவர்களாக இருக்கிறார் கள்! ஓட்டைக் குடிசையிலே, ஒன்பது குடுப்பங்கள் ஒன்றாக இருக்கிறோம் என்று ஓலமிடுபவர்களை அந்த வேதனையிலிருந்து காப்பாற்றுவதற்கு - அவர் களை விடுவிப்பதற்கு - அவர்கள் நம்மிலே ஒரு அங்கம்; நமது சமுதாயத்திலே அவர்கள் ஒரு பிரிவு ; - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/111&oldid=1703660" இலிருந்து மீள்விக்கப்பட்டது