பக்கம்:சொல்லோவியம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையும்-மனிதனும் பணிபுரியும் பாவையர் பாசறையைச் சேர்ந்த அருமைச் சகோதரிகளே! இந்தப் பாசறையின் சார் பில் என்னை அழைத்துச் சிறப்புரை நிகழ்த்துமாறு கேட்டுக்கொண்ட அனைவருக்கும் நான் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறேன். - - நண்பர் கிருட்டிணமூர்த்தி அவர்கள் தன்னு டைய உரையிலே குறிப்பிடும்போது நான் சார்ந்திருக் கும் கழகத்தின் சார்பாக பலமுறை கூப்பிட்டும் அதற் கெல்லாம் வராத கருணாநிதி இப்போது வந்திருக் கிறார் என்று பெருமையோடும் ஜாடையாக என்னைக் குற்றம் சாட்டவேண்டுமென்ற தோரணை யிலும் குறிப்பிட்டார். இம்மாதிரியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுகிற நேரத்தில், உள்ளூரில் என் னு டைய கழகத்தைச் சேர்ந்தவர்களைக் கேளாது ஒப்பு தல் தருவதில்லை. அதைப்போலவே, முறைப்படி நண்பர் கிருட்டிணமூர்த்தி அவர்களைக் கேட்டுக் கொண்டு - அவரும் ஒப்புதல் அளித்த பிறகே இந்த விழாவிலே நான் கலந்து கொள்ளுகிறேன். சொந்தப் பிள்ளையை நாமே கொஞ்சிக் கொண்டிருப்பதைவிட, அடுத்த வீட்டுக்காரரையும் கொஞ்ச விடுவது தான் முறை; நல்லது. இந்த நாட்டிலே பரம்பரை பரம் பரையாக தமிழ்க் குடும்பங்களிலே வளர்ந்து வருகிற ஒருநிலையும் ஆகும். தோட்டம் விளைத்த தோட்டக் காரன் நம்முடைய தோட்டத்திலே விளைந்த ரோஜா மலர்தானே இதை அடுத்தவர்கள் வைத்துகொள்ளக் கூடாது; தானும், தன்னுடைய வீட்டிலே இருப்பவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/113&oldid=1703662" இலிருந்து மீள்விக்கப்பட்டது