பக்கம்:சொல்லோவியம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்ட 126 குறட்பாக்களும் எவ்வளவு கலையழகோடு பொறுத்தப்பட்டவைகள் என்பதை நீங்கள் உணர முடியும். த எங்களுக்கு கலையுலகத்திலே தொடர்பு இருக் கிறது. இல்லை, நாங்களும் கலையுலகத்திலே இருக் கிறோம். தொடர்பு இருக்கிறது என்று சொன்னால் கூட அது வேறு; இது வேறு என்றாகிவிடும். மனித னுடைய வாழ்க்கையிலே அத்தனையும் கலைதான். குழந்தையின் மழலைமொழி கலையாக்கப்படுகின்றது வள்ளுவரால், யாழைவிட - குழலைவிட இனியது என்று சொல்லப்படுகிறது. குழந்தையின் மழலைக் குர ரலிலிருந்து சாகிற போது கேட்கிற மரணக்குரல் வரையிலே கலையம்சம் நிரம்பியதாகத்தான் இருக் கிறது; ஆகவே மனிதனுடைய வாழ்க்கையில் கலை இல்லாது எதுவுமில்லை. மனிதன்-கலை = காட்டு மிராண்டித்தனம். சிலர் கேட்கிறார்கள், "கலை, கலைக்காக இருக்க வேண்டுமா? கலை, வாழ்வுக்காக் இருக்க வேண் டுமா?' என்று. இந்தப் பாசறையைப் பொறுத்த வரை கலை, கலைக்காகவே இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் அல்ல. கலை வாழ்க்கைக்காக இருக்க வேண்டுமென்று கருதுகிறவர்கள் தான் நிறைந் திருக்கிறார்கள், என்பதற்கடையாளமாகவே, "கலை யும் மனிதனும் ' என்று தலைப்பு தந்திருக்கிறார்கள். 66 . இன்னுமொரு குரல் எங்கிருந்தோ கிளம்பும். கலையைப் பிரச்சாரத்திற்குப் பயன் படுத்தலாமா?" என்று. "பிரச்சாரம் " என்பதற்கு அவர்கள் என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/126&oldid=1703675" இலிருந்து மீள்விக்கப்பட்டது