பக்கம்:சொல்லோவியம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 பொருள் கொள்ளுகிறார்கள் என்பதை நாம் அந்த நேரங்களில் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். 66 ஒருவனிடத்திலே சென்று, 'நீ கள் குடிக் காதே!" என்று சொ கூட பிரச்சாரம்தான், இங்கு நடிக்கப்பட்ட நாடகத்திலே " கள் குடிக்கக் கூடாது" என்று எடுத்துச் சொன்னார்கள். அதுவும் கூடப் பிரச்சாரந்தான்! அந்தப் பிரச்சாரத்தைப் பரப்ப இங்கு கலை பயன்படுத்தப்பட்டது ஆகவே, கலையை எப்படிப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தாது இருக்க முடியும் ? மத மார்க்கங்களைப் பரப்ப இராமா யணம் போன்ற - மகாபாரதம் போன்ற இதிகாச நூல்களும் அவைகளை எடுத்துக் காட்ட நாடக மேடைகளும் இருந்தன. கந்தபுராணம் சைவத்தை யும் ; இராமாயண நாடகங்கள் வைணவத்தையும் பரப்ப உண்டாக்கிய பிரச்சார சாதனங்கள் தான். அதைப்போலவே ஒரு எழுத்தாளன் ஒரு அறி வியக்கவாதி தன் கருத்துக்களைச் சொல்ல எப்படித் தன் பேனாவை எடுக்கிறானோ, அந்தப் பேனாமுனை எழுப்புகின்ற குரல் நாட்டுமக்களுக்கான அறிவுரை யாக இருக்குமேயானால் பிரச்சாரம் என்று சொல்லு கின்ற வார்த்தையால் அவைகளை மூடிவிடக் கூடாது. கலையிலே பிரச்சாரம் தேவை.

― அதே நேரத்தில், எதுவும் அளவுக்கு மீறக் கூடாது என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அதை உணராதவர்கள் அல்ல; எந்த இடத்திலே, எப்படி யெப்படி, எந்தெந்தக் கருத்துக்களை - எந் தெந்தப் பாணியிலே, " கேட்டார் பிணிக்கும் தகைய வாய், கேளாரும் வேட்ப" எங்களுடைய வார்த்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/127&oldid=1703676" இலிருந்து மீள்விக்கப்பட்டது