பக்கம்:சொல்லோவியம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 யினரையும் சந்தித்தது. நீங்கள் நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அந்த நூற்றிருபது இடங்களில் காங்கிரசு பெற்ற வோட்டுகள் முப்பது லட்சத்து ஐம்பத்தெட்டாயிரத்து எண்ணூற்று ஐம்பத் தைந்தாகும் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற வோட்டுகள் பதினேழுலட்சத்து ஒன்பதினாயிரத்து எண்ணூற்று எழுபத்துநான்கு ஆகும்! எங்களைச் சந்தித்த நாற்பத்துமூன்று இடங்களிலும் சும்யூ னிஸ்டு பெற்ற வாக்குகள் ஐந்துலட்சத்து நாற்பத் திரண்டாயிரத்து நூற்றறுபதாகும். காங்கிரஸ் சீர் திருத்தக் கட்சி பெற்றது மூன்று லட்சத்து நாற்பத் தையாயிரத்து எழுநூற்றுமூன்று வோட்டுகள்! இந் தப் புள்ளி விவரங்களை வைத்து ஆராய்ந்தால்- நமக்கு ஒரு மிகப் பெரிய உண்மை புலப்படும். நாட் டிலே காங்கிரசுக்கு அடுத்த பெரிய கட்சி எது வென்றால், இதுவரை வாய்ச் வாய்ச் சவடால் அடித்து வந்தார்களே கம்யூனிஸ்ட் கட்சிதானென்று ; அந்தக் கம்யூனிஸ்ட கட்சியல்ல; சோசலிஸ்ட் கட்சியோ; பிரஜா சோசலிஸ்ட் கட்சியோ அல்ல; காங்கிரசு சீர் திருத்தக் கட்சியுமல்ல. திராவிட முன்னேற்றக் கழகம்தான் காங்கிரசுக்கு அடுத்த பெரிய கட்சி என்பது இந்தத் இந்தத் தேர்தலின் மூலம் நிச்சயமாக ஊர்ஜிதமாகி விட்டது நான் இதை எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்லுகிறேன் என்றால், கம்யூனிஸ்டுகளைச் சந்தித்த. நாற்பத்திமூன்று இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற வோட்டுகள் ஆறுலட்சத்து இருபத்தி ரண்டாயிரத்து ஏழுநூற்றுபத்தொன்பது ஆகும். கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வோட்டுகள் ஐந்துலட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/13&oldid=1703200" இலிருந்து மீள்விக்கப்பட்டது