பக்கம்:சொல்லோவியம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - 132 - இயக்கத்தின் தலைவனை விசாரணை செய்து தீர்ப்புக் கூறவேண்டிய அவசர, அவசியமான கட்டத்திலே யிருக்கிறோம் நாம். சொல்லப் போனால் இவன் புரட்சிக் காரன் மட்டுமல்ல மகா பயங்கர வாதி! பயங்கர வாதி மட்டுமல்ல - படுநாசம் விளைவிக்கச் சிறிதும் தயங்காத பரமபாதகன் -பாராளுமாமன்றத்திலே இவன் ஒரு பிரதிநிதி - தனி ஆளாக நின்று இது வரையில் நமது ஆட்சியைச் சட்டபூர்வமாகக் குறை கூறி வந்தவன் - தனக்குப் பின் லட்சோப லட்சம் பயங்கரவாதிகளை அணிவகுத்து நிறுத்தித் திடீரென ஆட்சியைக் கவிழ்ப்பதற்குப் பலாத்காரத்தின் துணையை நாடியிருக்கிறான் இவன் லட்சியம் நிறை வேறி நாமெல்லாம் இவன் கையிலே அகப்பட்டிருப் போமானால் நமது எலும்புகளைக்கூட நமது அன்புக் குரிய குடும்பத்தாரிடமோ, நண்பர்களிடமோ, தருவ தாக உத்தேசமில்லை இந்த விடுதலை இயக்கத்துக்கு! இந்த நாட்டுக்குரிய பெயரை அளிக்க மறுத்தோமாம். சாதி வெறிக்குத் தூபமிட்டோமாம். மொழியைப் பலியிடச் சதி செய்தோமாம். கலாச் சாரத்திலே கை வைத்தோமாம். அடுத்த நாட்டுக் காரனிடத்திலே இவர்களை யெல்லாம் சேர்த்து அடமானம் வைத்தோமாம், இப்படி ஆயிரக் கணக் கில் குற்றச்சாட்டுகள் விடுதலை இயக்கத்தினரால் நம்மீது சுமத்தப்படுகின்றன. இவைகளுக்கெல்லாம் ஆதாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்று கேட்கும் அதிகாரத்தை இவன் எப்படிப்பெற முடியும்? இவன் நமது ஆட்சிக்குட்பட்டவன், இந் நாட்டில் நமது ஆட்சி வேரூன்றி நிலைக்கத் தேவை யான நல்ல யோசனைகளை அளிப்பதற்கு மட்டுமே ஏன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/132&oldid=1703681" இலிருந்து மீள்விக்கப்பட்டது