பக்கம்:சொல்லோவியம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 ஒரே யொரு போர்! அந்தப் போரிலே கலந்து வாகை மாலை சூடவாரீர் தோழர்களே! பாண்டியன் பரம்பரையினரே! சேரன் சந்ததியினரே ! சோழனின் 'சொந்தக்காரரே! வாரீர் ! சிறுத்தையின் உறுமல் - சிங்கத்தின் சீற்றம் - கறுத்த கழுதையே அங்கேன் கனைக்கின்றாய் என்று கேட்டிடவாரீர்! ஆண்ட இனத் தால் மீண்டும் முற்றுகை - மாண்டிடும் புழுவே மகுடம் கழற்று என்று மார் தட்டிட வாரீர்! குடித்திடு வோம் உயிர் - கொடுத்திடுங்கள் நாட்டை, பிரிவினை வேண்டா மெனும் பெரும் உபதேசம் நரிகளின் ஊளை ! நாட்டு வெறிபிடித்த காளைகளே ! கிலிபிடித்த மனிதர்களைக் கீறி யெறியுங்கள்! புலிவாழ்வின் உச்சி யிலே புதுமைகளைப் பொறித்திடுவோம்! என்று புரட்சிப்பண்பாடவாரீர்! . வா ரீர்! வாரீர்! வாலிப வீரர்களே ! வைர நெஞ் சுடைத் தோழியர்களே! வன்மை நிறை பெரியோர் களே! என அழைக்கிறேன். வணக்கம். (தலைமையுரை கோவில்பட்டி மாநாடு 26-8-50) 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/158&oldid=1703707" இலிருந்து மீள்விக்கப்பட்டது