பக்கம்:சொல்லோவியம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணிபுரிவோம்! எந்த அரசியல் கட்சியின் தொடர்பும் கொள்ளா மல் தனித்துச் செயலாற்ற வேண்டுமென்று தபால் தந்தி ஊழியர்களுக்கு ஆலோசனை கூறிய அரசாங்கம் இன்று உங்களது கோரிக்கைகளை அலட்சியப்படுத்தி குரலுக்கும் மதிப்பளிக்காது போய்விட்ட காரணத் தால் இன்று நீங்கள் எங்களைப் போன்றவர்களிடம் குறைசொல்லி தேறுதல் வார்த்தைகளையாவது பெறு வோம் என்ற நம்பிக்கையுடன் என்னை இங்கு அழைத்திருக்கிறீர்கள். . தீயுண் வீட்டுக்குள் திண்டாடுகிறவனின் நிலை மையைக் கண்டு தெருவிலே நின்றவாறு "அதோ அந்த உத்திரத்தில் ஏறி வெளியே குதித்து உயிர் தப்பிவிடு” என்று யோசனை கூறிவிட்டு வழிநடக்கும் கல்நெஞ்சம் படைத்தவர்களைச் சேர்ந்த கூட்டமல்ல நாங்கள். தீப்பட்டுத் தேகமெங்கும் வெந்து போயி னும் கவலையில்லையென நெருப்பிடையே பாய்ந்து தவித்திடுவோரைக் காப்பாற்றுவதையே கடமையாக கொண்டிருக்கும் குழுவினைச் சேர்ந்தவன் நான். தபால் தந்தி ஊழியர்கள் அரசாங்கத்திடம் தங் கள் வேண்டுகோளை வைத்திடும்போது இந்த இலாகா ஒரு சேவைக் கூடம் என அரசாங்கம் விமர் சனம் செய்து சேவையின் சிறப்பு பற்றி விளக்கமும் உரைக்கும். தபால் கார்டு, கவர் விலை உயரும்போது பொது மக்களின் கூக்குரலை அடக்குவதற்கு இந்த இலா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/166&oldid=1703715" இலிருந்து மீள்விக்கப்பட்டது