பக்கம்:சொல்லோவியம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 - - கருணாநிதியா! அவன் நான்கு அடி உயரந் தானே யிருக்கிறான். சின்னப் பையனைப்போல, நமது வீட்டுக் குழந்தையைப்போல. அத்தகைய சிறுவனை எதிர்க்க எழுபது வயதுப் பெரியார் — தாத்தா-தள்ளாத வயதிலே படாத பாடுபடுகிறாரே ஏன்?-குளித்தலைத் தொகுதி மக்களின் உள்ளத் திலே எல்லாம் இந்தக் கேள்வி தைத்தது, இந்தச் சாதாரணமானவனை எதிர்க்கக் காமராசர் சுற்றுப்பய ணம் நடத்துகிறாரே, ஏன்? பக்தவத்சலம் பவனி வருகிறாரே ஏன்? காங்கிரசின் பிரச்சார பீரங்கிகள் முழங்குகின்றனவே ஏன்? திராவிடர் கழகத்தின் படையே — 'சேலத்தை விட்டுவிடாதே! காஞ்சியை விட்டுவிடாதே! குளித்தலையை விட்டுவிடாதே! என்று தினம் தினந் தலையங்கம் எழுதப்படுகிறதே ஏன்? என்ற கேள்விகள் கிளம்பத்தான் செய்தன! 'ஓகோ! இந்தக் கருணாநிதியிடத்திலும் ஏதோ சரக்கு இருக் கத்தான் வேண்டும். அதனால் தான் பெரியார் இவனை யும் ஒழிக்க முற்பட்டிருக்கிறார்” என்று கருதினீர்கள். அந்தச் சரக்கிற்கு மதிப்பளிக்க விரும்பினீர்கள், மதிப்பையும் அளித்தீர்கள். அந்த மதிப்புதான் இங்கு குவிந்திருக்கும் மாலைகளும், நான் பெற்ற வெற்றியும். இந்த வெற்றியை நான் உதாசீனம் செய்யமாட் டேன். துர்விநியோகம் செய்துவிடமாட்டேன் இன்றைய தினம் இந்த லாலாபேட்டையிலே நீங்கள் நடத்தினீர்களே மாபெரும் ஊர்வலம் - பவனி- இதை நான் என்றென்றும் மறக்கமுடியாது. என் உள்ளத்தில் எங்காவது ஒரு மூலையில் இடம் பெற்று என் பொறுப்பை கடமையை எனக்கு -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/17&oldid=1703204" இலிருந்து மீள்விக்கப்பட்டது