பக்கம்:சொல்லோவியம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அல்லவா? அவர் அறத்துப்பால், பொருட்பால் காமத்துப்பால் என்கிற முப்பெரும் பால்களை வகுத்து' அவற்றிலே பலப்பல அதிகாரங்களை வகுத்து-அந்த அதிகாரங்களிலே அருமையான - அழகு சிந்துகின்ற எழில் சொட்டுகின்ற- அறிவுமணம் கமழுகின்ற- அறிவொளி பரப்புகின்ற குறள்களை நமக்குத் தந் திருக்கிறார் என்றால், அந்தக் குறள்களிலே எந்தெந்த இடங்களிலே அணி இருக்கிறது ? தமிழர்கள் புரிய வேண்டிய பணிகள் பற்றிய குறிப்புகள் இருக்கின் றன ? இந்த நாட்டுக்குத் தேவையான கருத்துக்கள் இருக்கின்றன? மனிதனுடைய வாழ்க்கைக்கு தேவை யான எண்ணங்கள் பொதிந்து கிடக்கின்றன ?- என் பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். குறளைப்பற்றி வந்திருக்கிற அர்த்தங்கள்- உரை பலதரப்பட்டவை. கள் வியாக்யானங்கள் - - பல மொழிகளிலே மொழி பெயர்க்கப்பட்டு. மேல்நாட் டிலே இருக்கின்ற நூல் நிலையங்களிலே இடம் பெற் றிருக்கின்ற திருக்குறள், தமிழ் நாட்டில்-பலரால் பலவகையிலே தாழ்த்தப்பட்டிருக்கிறது. அப்படித் தாழ்த்தியவர்களில் குறளைப் புராணகாலத்துக்கு. இழுத்துச் சென்றவர்களும், சரித்திர காலத்துக்கு இழுத்துச் சென்றவர்களும், அதை வேறு, வேறு பக் கம் திருப்பிக்கொண்டு போகிறவர்களும் ஏராளம், ஏராளம்! ஆயிரத்து முன்னூற்றுமுப்பது குறட்பாக்களிலே எண்ணிறந்த குறள்கள் இன்றைய காலத்துக்கும் ஒத்துவரக்கூடிய குறள்கள். அதற்காக வள்ளுவர் எழுதியவைகளில் - சில இடைச்செருகல்களில்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/38&oldid=1703225" இலிருந்து மீள்விக்கப்பட்டது