பக்கம்:சொல்லோவியம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வனாக்குகிறார்கள். 4 6 43 99 திருவள்ளுவனைப் பொய்யனாக்குகிறார்கள். அறிவற்ற உள்ளபடியே “பசுமாடு பால் கொடுக்காது" என்ற பொருள்படும்படி எழுதியிருக்க வேண்டுமேயானால் ஆப்பயன் குன்றும் " என்று எழுதியிருக்கவேண்டும் ப்" என்ற ஒன்றைப் போட்டு! அந்த "ப்" இல்லாத காரணத்தால் 'ஆப யன் குன்றும் என்கின்ற நேரத்திலே ஆகவேண்டிய காரியங்கள் நடைபெறாது என்றே பொருள்படும். அரசன் சரியாக இல்லாவிட்டால் எப்படி எப்படி ஆக வேண்டிய காரியங்கள்தான் நடைபெறும்? 6 அதைப் போலவே, "அறுதொழிலோர் நூல் மறப்பர்" என்கிறார் வள்ளுவர், உரை எழுத வந்த சுப்பிரமணிய பிள்ளை "அறுதொழிலோர்" என்பது சரியில்லை. "அறிதொழிலோர்" என்றிருக்க வேண் டும். அறிந்த தொழில்கள் அனைத்தும் மறந்துவிட் டனர் எனப் பொருள்பட என்கிறார். இந்த நிலைமை யிலே குறளுக்குப் பலவகையான கருத்துக்கள் தரப் பட்ட காரணத்தால்தான், இன்றைய தினம் நாட்டு மக்களிடையே 'குறள்' என்றால் இத்தனை சிறப்புடை யது, அதை மேல் நாட்டவர்களும் விரும்பிப் படிக் கிறார்கள். ஆகவே சொந்த நாட்டுக்காரர்களே நீங்க ளும் படியுங்கள் என்று சொல்ல வேண்டிய கேவல மான நிலை சொல்லித் தீரவேண்டிய மிக மிகக் கீழான நிலை நாட்டிலே ஏற்பட்டிருக்கிறது குறளுக்குச் சிறப்பா? அதை மக்களுக்கு உணர்த்த வேண்டிய நிலையா? சொல்லவே வேதனையாகத்தான் இருக்கிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/43&oldid=1703230" இலிருந்து மீள்விக்கப்பட்டது