பக்கம்:சொல்லோவியம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 கின்ற தம்மை இடித்துச் சொல்லுகின்ற பெரியாரைத் துணைவராகக் கொள்ளாத மன்னன் பகைவர் இல்லை யாயினும் தன்னைத்தானே கெடுத்துக் கொள்ளுவான். கெட்டுவிடுவான் என்று சொல்லியிருக்கிறார். அந்த முறையிலே இடித்துச் சொல்வதற்காகவே வந்தி ருக்கிற பெரியார்களுடைய துணையை ஆளுகின்றவர் கள் பெறவேண்டுமென்று வள்ளுவர் அந்தக் காலத் திலேயே உணர்ந்து சொன்னார் போலும்! கவர்னருடைய உரையைப் பற்றி இங்கு பேசிய நண்பர்கள் பலர் "கன்னியா குமரியை வரவேற்கி றோம்' என்று கூறியிருக்கிறார்கள். அந்தக் கன்யா குமரியை நாம் தேவிக்குளக்கரையிலோ. பீர் மேட்டின் மீதோ நின்று கொண்டு வரவேற்காமல் சிதைந்தூ போன செங்கோட்டையின் மீது நின்று வரவேற்கி றோம் என்று எண்ணும்போது, தேவிகுளம், பீர்மேட் டைப் பெறுவதற்கு வழிவகை காணப்படவில்லை - கவர்னர் உரையில்-சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். க குளித்தலைத் தொகுதியில் நிலச்சட்டங்களால் நிலவும் அநீதிகள் ! 1 அடுத்து நிலச்சட்டங்களின் பெயரால் நியாய வாரச்சட்டங்களின் பெயரால்; விவசாயிகள் திருப்தி யடைந்து சுமுகமான நிலையிலிருக்கிறார்கள் " என்று கவர்னர் அவர்களுடைய உரையில் குறிப்பிட்டிருக் கிறார்கள். என்னுடைய குளித்தலைத் தொகுதியைப் பொறுத்தவரையிலும், திருச்சி மாவட்டத்திலும் இன் றைய தினம் இந்த நியாய வாரச் சட்டத்தின் காரண மாகவும்; சீர்திருத்தச் சட்டத்தின் காரணமாகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/55&oldid=1703242" இலிருந்து மீள்விக்கப்பட்டது