பக்கம்:சொல்லோவியம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ய 57 காரணமாக மாட்டுவாரக்காரர்கள் என்றால் யார்? கையேர்க்காரர்கள் என்றால் யார் ? என்ற பிரச்னை எழும்பி அதைப்பற்றிய விளக்கத்தைக் கவனிக்கும் போது தான் நிலைமை தெரியவருகிறது. மாடும் தந்து அவர்களுடைய சொந்த உழைப்பையும் சிந்தி, நிலம் உடையவர்களிடத்தில் விதை, உரம், எரு - இவை களைப் பெற்று, அப்படிப் பெறுகிற அந்தப் பொருளுக் காக, விளைச்சலில் அவர்கள் தனியாக தானிய மாகவோ, அ அல்லது பொருளாகவோ எடுத்துக் கொண்ட பிறகு அறுபது-நாற்பது என்று பெற வேண்டுமென்று சொல்லப்பட்டாலும் இன்றைய - தினம் மாட்டு ஏர்க்காரர்கள் விவசாயிகள் அல்ல என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதைப்போலவே கையேர்க்காரர்கள் யார் என்றால் அவர்கள் பெரும்பாலும் ஆதிதிராவிட வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் -பழங்குடி மக்கள் என்ற பிற்பட்ட மக் கள்-பாட்டாளி மக்கள்! அப்படிப்பட்ட வர்க்கத் தினருக்காகத்தான் இந்த நியாயவாரச் சட்டம் செய் யப்பட்டது. அந்த அடிப்படையில் அவர்களுக்கென்று இந்த நியாயவாரச் சட்டத்தையும், நிலவெளியேற்றத் தடுப்புச் சட்டத்தையும் கொண்டு வந்தாலும், அவர் கள் அவைகளின் பயனை அடைய முடியாமல் நீதி மன்றம் தீர்ப்பு அளித்து விட்டது எந்த அடிப்படை யிலாவது, எந்த அளவிலாவது இந்த நியாயவாரச் சட்டம் அவர்களுக்கு நன்மை வழங்கியிருக்கிறதா என்று பார்த்தால், இல்லையென்று தான் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட மாட்டுவாரக்காரர்களும் கையேர்க்காரர்களும் சாகுபடியாளர்கள் அல்ல என்ற தீர்ப்புக்கு இன்று ஆளாகியிருக்கின்றனர். அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/57&oldid=1703244" இலிருந்து மீள்விக்கப்பட்டது