பக்கம்:சொல்லோவியம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மேல் அப்பீல் செய்யப்பட்டு மீண்டும், வழக்கு வரும் ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் எடுத்துக் கொள்ளப்படப்போவதாக இருக்கிறது! க அதற்குள் விவசாயிகளுடைய நிலைமை என்ன வென்றால், முத்து முத்தாக வியர்வை சிந்தி, மணி மணியாக நெற் குவியலைத் தந்தவர்கள் களத்து மேட்டில் காவலர் புடைசூழ அதைக் கொட்டிவிட்டு, வீட்டிலே வறுமைத் தேள் கொட்டிட வாடிக் கிடக் கிறார்கள். குளித்தலைத் தொகுதியில் இப்போது நிலவி வருகிற இப்படிப்பட்ட நிலைமைபற்றி கவர்னர் அவர் கள் தன்னுடைய உரையில் குறிப்பிட மறந்தது வருந்தத்தக்க ஒன்று. நெருக்கடிக்கு ஆளாகி யிருக்கக்கூடிய விவசாயி களுக்கு என்ன செய்யப்பட வேண்டுமென்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். உயர் நீதி மன்றம் ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு முன்னதாக புதிய ஒரு திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும். அதையும் துரிதமாகக் கொண்டு வரவேண்டும். ஏழைத் தொழிலாளர் களுடைய ஏழை விவசாயிகளுடைய அவல நிலை மையை நீக்குவதற்கு இந்த அரசாங்கம் என்ன நட வடிக்கை எடுத்துக்கொள்ளப் போகிறது என்பதைப் பற்றி கவர்னர் அவர்களுடைய உரையில் ஒன்றுமே இல்லை என்பதை மிகவும் கவலைகொண்டு தெரிவித் 'துக் கொள்ளுகிறேன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/58&oldid=1703245" இலிருந்து மீள்விக்கப்பட்டது