பக்கம்:சொல்லோவியம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைத் 60 - பற்றாக்குறை இதுபோன்று எப்பொழுதும் நீடித்துக் கொண்டேயிருக்கும். இத்தகைய நிலைமையிலிருந்து திராவிடம் விடுபட்டு, திராவிடம் தனித்து, செழித்து நின்று, வளம் பெற, வாழ, நல்ல முறையில் திட்டங் தீட்டவேண்டும். அதற்குக் குறிப்பாக உதாரணத்திற்காக ஒன்றை மட்டும் சொல்லுகி றேன். குடகனாறு குடகனாறு திட்டம் தேவை என்ற முயற்சி ஒன்று குளித்தலைத் தொகுதியில் 1952 ஆம் ஆண்டு முதற் கொண்டே இருந்து வருகிறது. அதைப்பற்றி அடிக்கடி எடுத்துச் சொல்லப்பட்டு வருகிறது. கனம் முதலமைச்சர் ரெவின்யூ அவர்களிடமும் ; கனம் அமைச்சர் அவர்களிடமும் ; கனம் மராமத்து அமைச்சர் அவர்களிடமும் பலதடவை -பல மனுக்கள் மூலமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது அங்குள்ள பி. டபுள்யூ. டி. சூபர்வைசர் அவர்கள் இந்தத் திட்டத்தை எடுத்துத் துரிதமாக நடத்தவேண்டு மென்று ஆய்ந்து சொல்லியிருக்கிறார். அழகாபுரி என்கிற இடத்தில் ஒரு அணை கட்டினால் அதன் மூல மாகச் சுமார் பத்தாயிரம் ஏக்கர் புஞ்சை நிலத்தை நஞ்சையா க மாற்றக்கூடிய வசதியிருக்கிறது. அதற் குப் பனிரண்டு லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இது கவனிப்பார் அற்றுக் கிடக்கிறது. இப்படிப்பட்ட நல்ல திட்டங்களை எல் லாம் கவர்னர் அவர்கள் தன்னுடைய உரையில் சிறிதும் குறிப்பிடவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டு என்னுடைய உரையை இத் துடன் முடித்துக் கொள்ளுகிறேன். (FLL LOGOT MLD 4-5-57) (சட்ட மன்றம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/60&oldid=1703247" இலிருந்து மீள்விக்கப்பட்டது