பக்கம்:சொல்லோவியம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 99 தானென்றாலும், நாம் அமைத்திருக்கிற கிளைக்கழ கங்கள் கொஞ்ச நஞ்சமல்லவே! திருவல்லிக்கேணி கடற்கரையிலே நடைபெற்ற தலைமைக் கழகப் பாராட்டுக் கூட்டத்தின் போது நான் சொன்னேன், நான் குளித்தலைத் தொகுதியில் இருபத்திரண்டா யிரம் வோட்டுகளை மட்டும் பெறவில்லை. இருநூறு கிளைக் கழகங்களையும் பெற்றுவந்திருக்கிறேன் ' என்று, குளித்தலையிலே நான் நான் முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அபேட்சகனாக நுழைந்தபோது ஏழே ஏழு கிளைக் கழகங்கள் தான் இருந்தன. - அந்தத் தொகுதி முழுதிலுமே ! ஆனால் இன்றைய தினமே-இந்தக் குறுகியகால இடை வெளியில் இருநூறு கிளைக்கழகங்கள் அமைகின்ற நிலை எப்படி வந்தது? வெள்ளியணை யென்ற பகுதி யொன்று திராவிட முன்னேற்றக் கழகம் என்றாலே என்னவென்று புரியாத மக்கள் நிறைந்த இடம் 'அண்ணா' என்றால் அவரதுபடத்தைக் காட்டி;- அவர் எழுதிய எழுத்துக்களை எடுத்துக்காட்டி ; - பேச்சைப் படித்துச் சொல்லி "இவர்தான் அண்ணா "என்று கூறு கிற நிலைமை இருந்த இடத்தில் இன்ைைறய தினம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளை திறக்கப் படுகிறது என்றால், சாதாரணமாக அல்ல; மூன்று நாட்களில் ஒரூ சிறு கட்டடம் அமைத்து முடித்து அந்தச் சொந்தக் கட்டடத்திலேயே திறப்பு விழாவும் நடைபெறுகிறது என்றால், இந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பரவாத இடங்களில் எல்லாம் பரவி விட்டது என்பதை யார்தான் மறுக்க முடியும்? வெற்றிபெற்ற பகுதி - தோல்வி கண்ட பகுதி எங்குமே இத்தகைய வளர்ச்சி கண்டு விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/75&oldid=1703261" இலிருந்து மீள்விக்கப்பட்டது