பக்கம்:சொல்லோவியம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

e ஆசைத்தம்பி க 78 ! உங்கள் பிரதிநிதியாகச் சட்ட மன்றத்துக்குச் செல்ல விரும்பியது எதற்காக? அவர் இந்தத் தொகுதியில் சுற்றிய இரண்டுமாத காலத்தில் இரண்டு வாரங்கள் மட்டுமே உட்கார்ந்து இரண்டு கதைகள் எழுதியிருந்தால் ஆயிரக்கணக்கிலே சம்பா தித்திருக்க முடியும்! அதைப் போலத்தான் அறிஞர் அண்ணா அவர்களும், நானும், மற்றத் தோழர்களும் நினைத்தால் நாட்டுப்பணியை மறந்து நிறைய சம்பா தித்திருக்கலாம். "பர்மிட்டுகள்; லைசென்சுகள் " வழங் கியல்ல. மூளையை உருக்கி - சிந்தனைகளைத் தேக்கி ! கடற்கரையிலே -கனி குலுங்கும் சோலையிலே எங்களது வீடுகளிலே அல்ல; இயற்கையின் தாழ் வாரத்திலே அமர்ந்து பட்டி தொட்டிகளிலே உள்ள தோட்டங்களிலே அமர்ந்து இயற்கை வழங்கு கின்ற வனப்புகளை கவிதைகளாக - கதைகளாகத் தீட்டினோமானால் இந்த நூற்றைம்பது அல்ல, நிறையப்பொருள் சேர்க்க முடியும். "விடுதலை"யின் பெரியாரின் கணக்குப்படி ! இன்னும் கணக்குப்படி சிலர். இருதயத்தை எங்கோ எடுத்து வைத்துவிட்டுச் சொல்லுகிறார்கள், அறிஞர் அண்ணா அவர்களும்; ஆசைத்தம்பியும்; நானும் வெற்றிபெற்றது சினிமா வினால்தான் என்று - சினிமாவினால் பெற்ற செல்வாக் கினால்தான் என்று. நான் அவர்களுக்கு அறைகூவல் விட்டுச் சொல்லுகிறேன், நாங்கள் பெற்ற வெற்றி சினிமாவால் அல்ல! ஏனெனில் நாங்கள் கலையுலகத் திலிருந்து அரசியலுக்குத் தாவியவர்களல்ல - PREGOVE - - அரசி யல் உலகிலே அடி உதைகள் பட்டு - கல்லடியும் சொல்லடியும் பெற்று பல ஆண்டு காலம் கட்சிக் காகத் தொண்டாற்றி - - மக்களிடையே கொள்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/78&oldid=1703264" இலிருந்து மீள்விக்கப்பட்டது