பக்கம்:சொல்லோவியம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 - என்று வழக்கம் கொண்டேயிருக்கிறான் என்ற கேள்வி நமக்கு எழும். அதுமாத்திரமல்ல, பள்ளியறையிலே சென்றவர்கள் பள்ளியறையிலேயே தான் பிரசவத்தை வைத்துக் கொள்ளுவார்கள் கிடையாது. நீங்கள் அதே காதலர்களுடைய நிலையை - திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைமையோடு கொஞ்சம் இழுத்து வந்துபார்ப்பீர்களேயானால், நாம் கடற்கரை யிலே சந்தித்தது போன்ற கல்லக்குடி போராட்டம் நடத்திய நேரத்திலே - திருமணப் பத்திரிகை ய ம் அடித்துத் திருமணம் செய்து கொண்டதைப் போல- நான்சென்ஸை எதிர்த்து ரயில் நிறுத்தப் போராட் டம் நடத்திய நேரத்தில், குழந்தை பிறந்துவிடுமா என்று கேட்டது போல - திராவிடநாடு கிடைத்து விடுமா? என்று கேட்டார்கள். இன்றைய தினம் பள்ளியறைக்குச் சென்றிருக்கிறோம் - சட்ட மன்றத் திற்குச் சென்றிருக்கிறோம், குழந்தை பிறந்துவிடுமா என்று கேட்கிறார்கள்! திராவிடநாடு கிடைத்துவிடுமா என்று கேட்கிறார்கள்! குழந்தை பிறக்கிற இடம் பள்ளியறையல்ல! அதைப் போலவே திராவிடநாடு கிடைக்கிற இடம் சட்ட மன்றம் அல்ல என்பதும் எங்களுக்கு நன்றாகத் தெரியும். குழந்தை பிறக்கிற பிரசவ அறை இடம். அல்லது ஆபரேஷன் கேஸாமாக ஆஸ்பத்திரிக்கு. அதுவும் திராவிடநாடு என்ற குழந்தை பிறப்பது அவ்வளவு சுமுகமாக இருக்காது சுகப் பிரசவமாக இருக்க. முடியாது! ஆகவே, பிரசவ அறையிலேதான் இருந்தால் - - நடக்குமென்று நாங்கள் கருதமுடியாது. ஆபரேஷன் செய்து, அந்தக் குழந்தையை எடுக்கவேண்டிய நிலைமையிலே - இரத்தம் சிந்தவேண்டிய நிலைமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/87&oldid=1703273" இலிருந்து மீள்விக்கப்பட்டது