பக்கம்:சொல்லோவியம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

06 90 பாக்யம், முதல் நம்முடைய பாக்கியமே பாக்யம். மந்திரிக்கு நேராகவல்லவோ அமர்ந்திருக்கிறோம்! ! சபா நாயருக்கு எதிராக அல்லவோ வீற்றிருக்கிறோம். எதிரே செட்டி நாட்டரசர் - சரிநிகர் சமானமாக அமர முடியுமா? குட்டிக் குபேரர் ஆயிற்றே! அவருக்கு நேராக அமர்ந்திருக்கிறோமே! எவ்வளவு பெரும் பேறு செய்திருக்கிறோம்!. என்று மகிழவும் அல்ல - பூரிக்கவும் அல்ல ! எங்களுக்குத் தெரியும். அங்கே நாங்கள் அமர்ந் திருக்கின்ற நேரத்தில் தென்னகத்தில் புயலும், மின்னலும், இடியும், மழையும், விடுதலை வேட்கையும் காழுந்துவிட்டு எரிகிற அளவுக்கு லட்சோபலட்ச இளைஞர்கள் எங்களுக்குப் பின்னாலிருக்கிறார்கள்! அவர்களுடைய துணையோடு சாதிக்க வேண்டிய காரியங்கள் எத்தனை எத்தனையோ இருக்கின்றன. இந்த நாட்டினுடைய விடுதலையைச் சிரமேற் கொண்டு, திராவிடத் தாயினுடைய - தமிழன்னை யுடைய விலங்கொடிப்பதற்காக, நாம் வகுத்திருக் படையிலே நாமும் வீரர்கள்! என்பதை மறக்கமுடியாது! அங்கே அங்கே இருக்கின்ற மின்சார விசிறிகள், சுற்றுகின்ற நேரத்திலே. எங்க களுடைய தலையும் சுற்றிக்கொண்டு தானிருக்கிறது. எப்படி? இந்த நாட்டினுடைய அவல நிலையை நினைத்துச் சுற்றிக் கொண்டிருக்கிறது. பட்டுமெத்தை யிலே அமர்ந்திருக்கின்ற நேரத்தில், எவ்வளவு அழ கான மெத்தை ? எத்தனை ஒய்யாரமான ஆசனம்? என்றல்ல நண்பர்களே எண்ணிக் கொண்டிருக் கிறோம். முள்ளிலும், கல்லிலும் ஆயிரக்கணக்கான கின்ற நாங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/90&oldid=1703275" இலிருந்து மீள்விக்கப்பட்டது