பக்கம்:சொல்லோவியம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 கரங்கள் இருக்கின்றன - அதற்காகவே தேகம் எடுத்துவிட்டோம், என்கின்ற அத்தகைய உயர்ந்த நோக்கத்தை - அத்தகைய விடுதலை வேட்கையைப் பெற்றுத்தான், சட்டமன்றத்திலே அமர்ந்திருப்போம். என்பதைத் தயவு செய்து - தாய்மார்களே! பெரி யோர்களே! பேரன்பு கொண்ட இளைஞர்களே! மறந்துவிடாதீர்கள்! மறந்துவிடாதீர்கள்.!! சட்ட மன்றத்திலே, திராவிடத்தின் விடுதலைக் குரல் கேட் கிறது என்றால், இப்படி ஒரு நாள் வருமா என்று. ஒருநாளும் நினைத்தது இல்லை. இந்த நன்னாள் - பதினைந்து பேர்களே அமர்ந்திருக்கின்ற நாம் - திராவிட நாட்டினுடைய விடுதலையைப் பெற்ற, படைவீரர்களாக, திராவிடநாட்டின் மந்திரிகளாக, திராவிட நாட்டை அரசோச்சுபவர்களாக அமர்ந் திருக்கின்ற காலம் வரப்போகிறது என்பதற்கு அறி குறியாகும், க 1 பதினைந்து பேர்கள். எண்ணிக்கையிலே குறைவு தான். ஆனால் இந்த பதினைந்து பேர்களை அனுப்பி யிருக்கிறவர்களோ பதினேழு லட்சம் வாக்காளர்கள். காங்கிரசுக்கு அடுத்தபடியாக அதிக வாக்காளர்களை அதிக ஆதரவைப் பெற்றிருப்பவர்கள் நாம்தாம். இந்தத் தேர்தலிலே மூன்று பெரிய இயக்கங்கள் போட்டியிட்டன. காங்கிரசு, திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்டுகள். காங்கிரசு சீர்திருத்தக் கட்சியைப்பற்றிக் கவலையில்லை பதவி இல்லாத காரணத்தால் உற்பத்தியான கட்சி அது. பதவி கிடைத்தால் ஒட்டிக்கொண்டாலும் கொள்ளும். முன் சொன்ன மூன்று இயக்கங்களில் காங்கிரசுக்காரர்கள் இழந்ததைப் பெற்றவர்கள். திராவிட முன்னேற்றக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/93&oldid=1703642" இலிருந்து மீள்விக்கப்பட்டது