பக்கம்:சோனாவின் பயணம்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இதற்குள் அந்தக் காகம் ஒட்டகங்களைப் பற்றிய செய்தியைப் பரப்பி விட்டது. காகம் சொன்னதை வயதான மிருகங்கள் அலட்சியப்படுத்தின. ஆனால் குட்டி மிருகங்களோ அந்த அதிசய மிருகங்களைக் காண உடனே புறப்பட்டு விட்டன. அவை புதர்களின் பின்னாலும் பாறைகளின் பின்னாலும் ஒளிந்து ஒளிந்து சென்றன, ஒட்டகங்களின் கண்களில் படாமலே அவற்றைப் பார்த்துவிட வேண்டும் என்பதற்காக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோனாவின்_பயணம்.pdf/12&oldid=482901" இலிருந்து மீள்விக்கப்பட்டது