பக்கம்:சோனாவின் பயணம்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அவை சோனா அலைந்து கொண்டிருப்பதைப் பார்த்தன. வாயாடி முயல் புதரிலிருந்து வெளியே குதித்து, பின்னங்கால்களின் மேல் உட்கார்ந்து கொண்டு, சோனாவை உற்றுப் பார்த்தது. திடீரென்று அது உரக்கச் சிரித்தது.

“யார் நீ? எதற்காகச் சிரிக்கிறாய்?” என்று சோனா, கோபத்துடன் கேட்டது.

“நீ பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருக்கிறாய். நீ ஓர் அதிசயமான மிருகம் என்று காகம் சொன்னது. ஆனால் நீ அதிசயமாகவா இருக்கிறாய்? அவலட்சணமாக, அசிங்கமாக இருக்கிறாய். நீள நீளமான கால்கள், வேடிக்கையான கூனல் முதுகு, நெட்டைக் கழுத்து...ஹஹ்ஹஹ்ஹா” என்று கூறிச் சிரித்தது, முயல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோனாவின்_பயணம்.pdf/13&oldid=482908" இலிருந்து மீள்விக்கப்பட்டது