பக்கம்:சோனாவின் பயணம்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாவம், சோனாவுக்கு என்ன சொல்வதென்றே தெரிய வில்லை. மிகுந்த வருத்தத்துடனும் கோபத்துடனும் அம்மா விடம் ஓடியது. போகும்போது, அவற்றின் சிரிப்பொலி காதில் விழுந்து கொண்டேயிருந்தது. மான் ஒன்றுதான் அதைக் கேலி செய்ய வில்லை.

அம்மாவைப் பார்த்ததும், சோனா ‘ஓ’ என்று அழ ஆரம்பித்து விட்டது.

“என்ன? என்ன?” என்று அம்மா கேட்டது. சோனா மேலும் மேலும் அழ ஆரம்பித்தது. கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

“எனக்கு அந்த மிருகங்களைப் பிடிக்கவில்லை. அவை மிகவும் பொல்லாதவை” என்றது சோனா. “அவைகள் எல்லாம் என்னைக் கேலி செய்தன. ‘கூனன்’ ‘தட்டைக்கால்’ என்று எனக்குப் பட்டப்பெயர் கொடுத்து அழைத்தன. நான் இனி அவைகளுடன் விளையாடவே மாட்டேன்.” என்று அழுதுகொண்டே, நடந்தவற்றையெல்லாம் அம்மாவிடம் கூறியது.

“அழாதே, அவை உன்னைப் பார்த்து, விளையாட்டுத் தனமாகச் சிரிக்கின்றன. நமக்கு ஏன் திமில் இருக்கிறது என்பது அவைகளுக்குத் தெரியாது. தெரிந்தால், எங்களுக் கும் திமில் வேண்டும், என்று அவை கேட்கும். ஏன், நம்மைப் போல் தட்டையான கால்கள் கூட வேண்டுமென்று ஆசைப்படும்” என்றது அம்மா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோனாவின்_பயணம்.pdf/15&oldid=482913" இலிருந்து மீள்விக்கப்பட்டது