பக்கம்:சோனாவின் பயணம்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




“அப்படியானால் நம்முடைய நீளமான கால்களும் அருவருப்பான தட்டைப் பாதங்களும் எதற்காக உள்ளன?” என்று கேட்டது சோனா.

“அவற்றை அருவருப்பானவை என்று சொல்லாதே. அவை மிகவும் பயனுள்ளவை. நம்முடைய நீண்ட கால்களால், நாம் வேகமாக நடக்கலாம். நம்முடைய பாதங்கள் வட்ட மாகவும், தட்டையாகவும் இல்லாதிருந்தால், அவை மணலில் புதைந்து சிக்கிக்கொள்ளும். இதெல்லாம் மற்ற மிருகங்களுக்குத் தெரியாது. தெரிந்தால், அவை நம்மீது பொறாமைப்படும்” என்றது அம்மா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோனாவின்_பயணம்.pdf/18&oldid=482917" இலிருந்து மீள்விக்கப்பட்டது