பக்கம்:சோனாவின் பயணம்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அதனுடைய நண்பர்கள் எல்லாம் குளக்கரைக்கு ஒடி வந்தன. ஆனால், அவைகளால் அதற்கு உதவ முடியவில்லை. எல்லாமே மிகச் சிறிய மிருகங்கள். அவைகளால் எப்படி ஆட்டை நீரிலிருந்து வெளியேற்ற முடியும்? அவை திரும்பிச் சோனாவைப் பார்த்தன.

“நீ மிகவும் பெரியவன். தயவுசெய்து அதற்கு உதவி செய்” என்று எல்லாம் ஒன்று கூடிக் கெஞ்சின.

உடனேயே சோனா குளத்திற்குள் இறங்கியது. “என்னுடைய முதுகிலே ஏறிக்கொள்” என்று கூறிக் குனிந்து கொண்டது. ஆடு நன்றியுடன் அதன் முதுகில் ஏறிக் கொண்டது. சோனா பத்திரமாக அதைக் கரை சேர்த்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோனாவின்_பயணம்.pdf/25&oldid=482923" இலிருந்து மீள்விக்கப்பட்டது