பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி உரலினோ டிணைந்திருந்தேங்கிய எளிவே! (திருவாய் 1 3 : 1) என்று அவதாரத்தை அநுசந்தித்தே அவர்கள் மோஹித்தது; அர்ச்சாவத்திலிறே இவள் மோஹறிப்பது' என்ற வியாக்கியானப் பகுதியும் ஈண்டுச் சிந்திக்கத் தக்கது. இத் திருத்தலமும் எம்பெருமான் பற்றிய நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்களும் கல் நெஞ்சத்தையும் உருக்குவன. இதனாலன்றோ திருவாய்மொழி முற்றிலும் மறைந்த நிலையிலும் இத்திருவாய்மொழிப் பாசுரங்கள் மேல்நாட்டிலிருந்து காட்டு மன்னார் கோயிலுக்குப் போந்த பாகவதர்களின் நாவில் நடமாடியது? இத்திருவாய்மொழி தானே நாலாயிரம் முற்றிலும் பெற உற்ற திறவு கோலாயமைந்தது? ஆழ்வாரும் தாய்ப்பசுப் பக்கம் கிட்டி முகம்பெறாத கன்றுபோல் அமைந்து நோவு படுமாப்போலே அவன் சந்நிதியில் தளர்ந்து கிடந்து ஆர்த்தி யுடன் கூப்பிட்டு அலமருகின்றார். அர்ச்சையிலிருக்கும் எம்பெரு மானைச் 'செரு நீர்த் திருக்குடத்தை, ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே’ ' என்று கூறிச் சேவிக்கின்றார். அதன் பின்னர், 'திருக்கண்கள் மலர்ந்தாலன்றித் தரிக்ககில்லா அடியேன் இப்படிப் பட்டினி கிடந்து போக வேண்டியது தானோ? (2); கழிகின்ற நாட்களெல்லாம் உன் திருவடிகளையே பற்றிக்கொண்டு நடக்கும்படிக் கடைக்கண் நோக்க வேண்டும் (3); 'நான் உன்னைக் காண்பான் அலப்பு ஆய் (அலமந்து) ஆகாசத்தை நோக்கி அழுவன், தொழுவன், (4); உன் சரணம் தந்து என் சன்மம் களையாய் (7): என் அநாதி பாவங்களைத் தொலைத்து உன்னைப் பெறுவதொரு நல்விரகு பார்த்தருள வேண்டும் (6); உடல் தளர்ந்து என் உயிர் சரிந்து போம்போது இளையாது உன் திருவடிகளையே ஒருமிக்கப் பிடித்துப் போகும்படி திருவுளம் கொள்ள வேண்டும் (8); உன் திருவடி களைச் சேரும்படி நீயே வழி செய்ய வேண்டும் (5); நான் கண்டு அநுபவிக்கும்படி என் முன் வருதல் வேண்டும் (9); உனக்கு அடிமைப்பட்ட பிறகு இன்னும் உழல வேண்டு மோ? (10) என்று கூவிக் கூவிக் கண்பனி சோருகின்றார். இத்திருவாய் மொழிப் பாசுரங்களை வாயார ஓதி உளங்கொள்ளுகின்றோம். இந்த எம்பெருமான் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு சயனத் திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். 17. திருவாய் 5.8 : 1.