பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குடந்தை ஆராவமுதன் 83 இவரையும் தாயார் கோமள வல்லியையும் சேவித்த பின்னர் சந்நிதியை விட்டு வெளி வரும் நிலையில் திவ்விய கவியின் திருப்பாசுரம் நினைவிற்கு வருகின்றது. தானே படைத்துலகைத் தானே யளித்துநீ தானே அழிக்கும் தளர்ச்சியோ - வானில் திருமகுடம் தைக்கச் சிறுகுறளாய் நீண்ட பெருங்குடந்தைக் கிடந்தாய் பேசு." (அளித்து பாதுகாத்து; தளர்ச்சி - இளைப்பு: வானில் - விண்ணில்: மகுடம் - கிரீடம்; தைக்க - முட்ட குறளாய் - வாமனனாய், நீண்ட நீண்டு வளர்ந்தருளிய) என்ற பாசுரத்தையும் ஒதுகின்றோம். சூட்டோடு சூடாக (உண்மையில் பொடி காலைப் பற்று கிறது) ஆராவமுதனைச் சேவித்த விறுவிறுப்பில் சக்கரபாணி யையும் சேவிக்க விரும்புகின்றோம். தெற்கு நோக்கி நடந்து காவிரியின் தென் கரையிலுள்ள சக்கரபாணித் திருக்கோயிலுக்கு வருகின்றோம். இது ஒரு மாடக் கோயில்; ஒரு சிறிய கட்டு மலையின்மீது சந்நிதி உள்ளது. பெருமாள் ஏந்தியுள்ள சுதர்சன சக்கரம் எனப்படும் திருவாழி ஆழ்வான் உள்ளே எழுந்தருளி யுள்ளார். உற்சவர் சற்று உக்கிரமாகவே காணப்பெறுகின்றார். இருவரையும் சேவித்து விட்டு இராமசாமி சந்நிதிக்கு வர நினைக்கின்றோம். கும்பேசுவரர் கோயிலுக்கும் ஆராவமுதன் கோயிலுக்கும் (பின்புறம்) இடையிலுள்ள வீதி வழியாக இத்திருக்கோயிலுக்கு வருதல் வேண்டும். இது ஒரு கலைக்கோயில்; பழைய கோயில் அல்ல. பதினாறாவது நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் எழுந் திருக்க வேண்டும். இராமர் தம்பிமார்கள் மூவருடனும் அநுமனு டனும் திருமுடி கவிக்கும் நிலையில் எழுந்தருளியுள்ளார். நல்ல கம்பீரமான செப்புத் திருமேனிகள் இவை. இவை தாராசுரப் பகுதியில் மண்ணில் புதைந்து கிடந்தன என்றும், இராமனே தஞ்சையில் ஆண்ட அச்சுத நாயக்கன் கனவில் தோன்றி தான் இருக்கும் இடத்தைக் கூறினான் என்றும், அதன் பின்னர் அச்சுத நாயக்கனே அந்தத் திருமேனிகளை எடுத்துத் திருக்கோயில் எடுப்பித்துப் பிரதிட்டை செய்தான் என்றும் அறிகின்றோம். 18. நூற். திரு. அந்- 14