பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி இத்திருக்கோயிலின் மகாமண்டபம் ஒரு பெரிய கலைக் கூடமாகக் காட்சி அளிக்கின்றது. மண்டபம் முழுதும் மிகப் பெரிய தூண்கள்; எல்லாம் நுணுக்க வேலைப்பாடுகள் மிக்கவை. இங்குள்ள கலைச் செல்வங்களைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமாயின் விளக்கம் தருவதற்கு திரு.தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் நம் அருகில் இருக்க வேண்டும். பல மணி நேரம் இம்மண்டபத்தில் கழிக்கலாம். மகாமண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் இராமாயணக் கதை முழுவதையும் 200 ஒவியங்களில் தீட்டி வைத்துள்ளமையைக் காணலாம். இவை யாவும் அண்மைக் காலத்தில் உண்டானவை. இவை இத்திருக் கோயிலில் இருப்பது மிகப் பொருத்தமே. இன்னும் கடந்து கருவறை சென்றால் திருமுடிகவிக்கும் கோலத்தில் இராமர் சேவை சாதிப்பதையும் காண்கின்றோம். பட்டாபிராமனைச் சேவித்து நம் இருப்பிடம் திரும்புகின்றோம்.