பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி திருப்பாற்கடல் நாதன் முனிவருக்கு அருளத் திருவுளம் கொண்டு அகிலகில்லேன் இறையும்' என்று தம் திருமார்பில் உறையும் திருமகளிடம் மண்ணுலகில் தவம் புரியும் மார்க்கண்டேயருக் கருகில் ஒரு திருத்துழாய்ச் செடிக்கருகில் இரண்டாண்டுப் பெண் குழந்தையாகக் கிடக்குமாறு கூறுகின்றான். அங்ங்னமே பெரிய பிராட்டியும் குழந்தையாகக் கிடக்கின்றாள். முனிவரும் அக்குழந்தையை எடுத்து 'பூமிப்பிராட்டி' என்ற பெயரிட்டு வளர்த்து வருகின்றார். எம் பெருமான் வயது முதிர்ந்த ஒர் அந்தணர் உருவத்துடன் முனிவர் முன் வந்து தோன்றி அவர்தம் மகளைத் தமக்கு மணம் புரிவிக்குமாறு வேண்டுகின்றான். முனிவரும் அந்தணரின் வயதுப் பொருத்தமின்மையை எடுத்துக்காட்டி இப்பருவத்தில் மனப்பதைக் கைவிடுமாறு வேண்டுகின்றார். முனிவரின் நல்லுரை அந்தணரின் செவியில் புகவில்லை. தமக்கு மணம் புரிவிக்காவிடில் முனிவரின் எதிரிலேயே உயிரை விட்டு விடுவதாகக் கூறுகின்றார். இதைக் கேட்ட முனிவர் தம் மகள் அட்டில் தொழிலை அறியாதவன்; உணவிற்கு உப்பிடத் கூடத் தெரியாதவள். இவற்றைத் கருதியாயினும் மணம் புரிந்து கொள்ளும் எண்ணத்தைக் கைவிடுமாறு வேண்டுகின்றார். தமக்கு ஒரு வழி காட்டுமாறு எம்பெருமானைச் சரணடைய முடிவு செய்து தன் துயரைத் தீர்க்குமாறு அவன் திருவடி பணிகின்றார். எம்பெருமானைத் துதித்தவர் தம் மகளின் கருத்தையும் கேட்டறிய விரும்புகின்றார். தம் மகளிடம் முதியவரை மணம்புரிய ஒருப்படும் எண்ணத்தை வினவுகின்றார்; மனம் புரிவிக்காவிடில் அந்தணர் உயிரை விடுவதாகக் கூறுவதையும் எடுத்துக்காட்டுகின்றார். மகளும் தான் கிழவரை மணக்க விரும்பாததையும், வற்புறுத்தினால் தானும் உயிரை விட்டுவிடத் தயாராக இருப்பதையும் தெரிவிக்கின்றாள். முனிவர் இருதலைக் கொள்ளியின் எறும்பு போலாகித் தவிக்கின்றார். எம்பெரு மானைச் சரண் அடைந்து தம் துயர் போக்குமாறு வேண்டிய வண்ணம் தியானத்தில் ஆழ்ந்து விடுகின்றார். நெடும்போது கழித்துத் தம் கண்களைத் திறக்கும்போது அந்தண முதியவர் காணப் பெறவில்லை. இளமை வடிவத்தில் திருவாழி, திருச்சங்கு ஏந்திய வண்ணம் காட்சி தருகின்றான் எம்பெருமான். பொன்னாடை அணிந்த திருவரையில் ஒருகையும் கன்னிகா தானத்தை ஏற்கும் முறையில் ஒரு கையுமாக நிற்கின்றான். முனிவரும் தம் மகளை எம்பெருமானுக்கு மணம் புரிவித்தற்கு