பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிண்ணகா ஒப்பிலியப்பன் 87 இசைகின்றார். நான்முகனே வந்து தேவர்கள் புடைசூழ ஐப்பசித் திங்களில் திருமணத்தை நடத்தி வைக்கின்றான். எம்பெருமானும் தான் இத்தலத்தில் என்றும் உறையவும், எல்லா நன்மை களையும் அளிக்கவல்ல இத்திருத்தலம் மார்க்கண்டேயர் பெயரால் விளங்கவும், உப்பின்றி எம்பெருமான் அமுது செய்யும் உணவு அடியார்கட்கு மிக்க சுவையுடையதாக இருக்க வேண்டும் எனவும், முனிவர் வேண்டிய மூன்று வரங்களையும் அளிக்கின்றான். எம்பெருமான் விண்ணுலகினின்றும் இத் தலத்தை விரும்பி வந்தபடியால் அவன் விருப்பப்படி இத்திருத்தலம் 'திருவிண்ணகர்’ என்ற பெயர் பெறுகின்றது. மார்க்கண்டேயரும் துளசிதேவியும் தவம் புரிந்த இடமாதலால் "மார்க்கண்டேய கூேடித்திரம்”, “துளசி வனம் என்ற திருநாமங் களையும் பெறுகின்றது. இத்திருத்தலத்தில் துளசியின் இதழ் களால் அருச்சனை செய்விப்பவர் ஒவ்வோர் இதழுக்கும் அசுவமேத வேள்வியின் பயனைப் பெறுவர். இத்திருத்தலத் திற்கு நடந்து செல்வோர் ஒவ்வோரடிக்கும் மிக்க புண்ணியத்தை அடைவர். பசுவின் குளம்பளவு நிலத்தை எம்பெருமானுக்கு காணிக்கையாகத் தருவோர் வீடுபேறு அடைவர். சந்தனம், குங்குமம், மலர்கள் இவற்றை வழங்குவோர் பார்ப்பனரைக் கொன்ற பாவத்தினின்றும் நீங்கப்பெறுவர். தூபக்கால், தீபக்கால், அர்க்கிய பாத்திரம், திருமஞ்சனப் பாத்திரம், வெண்கல மணி, ஆடை முதலியன வழங்குவோர் எல்லாப் பாவங்களி னின்றும் விடுபடுவர். எம்பெருமானுக்கு ஏதாவது உற்சவத்தை நடத்தி வைப்போர் மக்கட் செல்வத்தை அடைவர். பங்குனிச் சிரவணத்தன்று அதிகாலையில் திருக்கோயில் திருக்குளத்தில் தீர்த்தமாடி, தானங்களைச் செய்து மறையோர் ஐவருக்குத் திருக்கன்னலமுது (பாயசம்) வழங்கி எம்பெருமானை வணங்கு வோரின் ஐம்பெரும் பாதகங்கள் தீயினில் தூசாகும். “துளசி வனம்’ என்று மொழிந்த அளவிலேயே பாவங்கள் பறந்து போகும். திருத்தலமான்மியத்தின் வரலாற்றைச் சிந்தித்த வண்ணம் இத்திருத்தலத்திற்கு புறப்படுகின்றோம். ஒப்பிலியப்பன் சந்நிதி கும்பகோணத்திலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது; குடந்தையிலிருந்து அடிக்கடி நகரப்பேருந்து வசதி உண்டு. தொலைவிலுள்ள சில ஊர்கட்குப் போகும் பேருந்துகளும் இச்சந்நிதி வழியாகச் செல்லும். நாகேஸ்வர இருப்பூர்தி நிலையத்திலிருந்தும் இச்சந்நிதிக்குச்