பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி செல்லலாம்; இந்நிலையத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது இத்திருத்தலம். ஒரு சிறு பயணிகள் விடுதியும் உள்ளது; நல்ல உணவு விடுதிகள் இல்லை. எனவே, புதிதாக வருபவர்கள் கும்பகோணத்தில் நல்ல விடுதியொன்றில் தங்கிக்கொண்டு இத்திருத்தலச் சேவைக்குப் போதல் சிறந்தது. நாம் கும்பகோணத்திலிருந்தே இத்திருத்தலத்திற்கு நகரப் பேருந்து மூலம் புறப்படுகின்றோம். ஒப்பிலியப்பனைப்பற்றிய ஆழ்வார் பாசுரங்கள் நம் மனத்தில் குமிழியிடத் தொடங்குகின்றன. எம்பெருமானைப் பொய்கையாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய நான்கு ஆழ்வார் பெருமக்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். திருமங்கையாழ்வார், இந்த எம்பெருமானை 'விண்ணகருள் பொன்மலை என்று உருவகிக்கின்றார். பெரிய திருமொழியில் மூன்று திருமொழி களில் எம்பெருமானிடம் தம் நிலையை முறையிடு கின்றார். முதல் திருமொழியில், சம்சாரத்தில் தமக்கு உண்டான வெறுப்பையும் விண்ணகரப்பனிடம் தமக்கு உள்ள விருப்பை யும் அவனது திருவுள்ளத்தில் படும்படி ஒரு முறைக்கு ஒன்பது முறை விண்ணப்பிக்கின்றார். 'விண்ணகர் மேவிய எம்பெரு மானே, இவ்வுலகமெல்லாம் பிறர் வசப்பட்டிருக்கையில், நின் திருவடிகளைப் பரப்பி இலச்சினை பட நடந்து அவற்றை ஆட்படுத்திக் கொண்டது போலவே, அடியேனையும் ஆட் படுத்திக் கொள்ள வேண்டும். (1); பாற்கடல் கடையப் பெற்ற பொழுது அதில் தோன்றிய நஞ்சினை அரனுக்கு உண்ணக் கொடுத்தாய்; புறவமுதாகிய உப்புச் சாற்றினை உம்பர்கட் களித்தாய்; "சீதக்கடலுள் அமுது’’ அன்ன பிராட்டியாகிய உள்ளமுதினை நீ ஏற்றுக் கொண்டாய் (2); கரிய திருமேனியை உடையாய், உன் திருமேனியில் சிவனுக்கு வலப்புறத்தில் இடமளித்தாய்; திரிபுரம் எரித்தபோது அவனுக்கு அழல்நிற அம்பானாய் (3); பிரளய காலத்தில் இரு சுடர்களையும் பல்வேறு உலகங்களையும், அவற்றிலுள்ள பிராணிகளையும் நின் திருவயிற்றில் வைத்துப் பாலகனாய் ஒர் ஆலிலையில் திருக்கண் வளர்ந்தாய் (4); ஒலிகட்கெல்லாம் மூல காரணமான அகரமாக இருக்கின்றாய் (5); அசித்தைத் திருமேனியாகக் 1. பெரி. திரு. 6.1 8.