பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிண்ணகர் ஒப்பிலியப்பன் 89 கொண்டாய்; நான்மறைகளின் வடிவமுடையாய் (6): பிரணவத்தின் பொருளாய்த் திகழ்கின்றாய் (7); மங்கையர்பால் காதலைப் பெருக்கிச் சிற்றின்பத்தை நுகர்வதால் பின்னையும் வரும் துன்பத்திற்குக் காரணமான கர்மத்தை நினைந்து அஞ்சி நின் திருவடிகளைச் சரண் அடைகின்றேன் (8); பிறப்பு - இறப்பு வட்டங்களில் உள்ள துன்பங்களை நினைந்து நின் திருவடிகளை அடைந்தேன் (9); உன்னைச் சேவிப்பதாகிய ஒரு பேற்றினை எனக்கு அருள் செய்வாயேல், அடியேன் 'இருள் தருமா ஞாலத்துள் இனிப்பிறவி யான் வேண்டேன்' என்று பேசுகின்றார். இனி, தான் அநாதிகாலம் சம்சாரத்தில் உழன்ற படியையும், மேல்வரக்கடவதான நரக யாதனயை நினைத்து அஞ்சுகின்ற படியையும் பரக்க விண்ணப்பம் செய்கின்றார். 'திருவிண்ண கரத்து எம்பெருமானே, நின்னைத் துதித்தற்குரிய சொற்களைக் கொண்டு அற்பர்களைத் துதிக்கும் எண்ணமுடையவனானேன்; ஐம்புல இன்பங்களை நுகர்ந்து தீர்த்தேன்; ஓரொரு காரணத்தை முன்னிட்டுப் பிறரிடமுள்ள அன்பையும் பகையையும் வெறுத் தொழித்தேன்; உன்னைச் சரண் அடைந்தேன் (1); நெடுங் காலம் நின்னை நினையாது மறந்தேன்; அசித்திலும் கடை கெட்டவனானேன்; பிறப்பிறப்பு வட்டத்தில் சிக்கித் தடுமாறி னேன்; இன்று நின் திருவடிப் பேற்றிற்குத் தகுதியானேன். (2); இரண்டு விபூதிகட்கும் நாதனே, மிக்க அன்புடன் என் உள்ளத்தை இடமாகக் கொண்டு தேனைப்போல் இனியனா யிருப்பவனே, தீண்டா வழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறிதசையும் வேண்டா நாற்றம் மிகுமுடல் பயனற்றமை நன்கறிந்து நின்னைச் சரண்டைந்தேன் (3); பெற்ற பிள்ளைகள் மனைவியர் முதலிய சுற்றத்தார் நான் இறக்கும்போது உதவி செய்பவரல்லர் என்பதையறிந்து அவர்களைக் கைவிட்டேன்; நீ பார்த்தனுக்கு அருளிய சரம சுலோகம் என்ற ஒள்வாள் உருவி வினைத் துறுகளை வேரறுத்தேன்; நின்னைச் சரண் அடைந்தேன் (4); இதுகாறும் நீர்க்குமிழிகள்போல் இருந்து கழிந்த அரசர்கள் பல்லாயிரம் பேர்கள் இறந்தனர்' என்ற சொல்லுக்கு இலக்காயினர். ஆகவே, உலக வாழ்வில் வெறுப்புற்று நித்திய ஐசுவரியம் பெறுவதற்காக நின்னை வந்தடைந்தேன். (5): நல்வழி நடக்க உடன்படாத ஐம்பொறிகளும் போகும் 2. பெரி. திரு. 6.2.