பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி வழியில் போகேன்; நீயே மல்லர்களை அடக்கிய மாமல்லன்; மதிள் நீர் இலங்கையழித்த வில்லன்; எனவே நின்னைச் சரண் அடைந்தேன் (6):ஐம்பொறிகளாகிய படுகொலைக்காரர் கையில் இனி ஒரு நொடிப்பொழுதும் நலிவு படமுடியாது; இந்தக் கணத்திலே அடியேனை உனதருளால் வாங்கிவிட வேண்டு கின்றேன் (7); வினையார் சுற்றத்தார்போல், சுற்றிக்கொண்டு என்னை வெந்நரகில் தள்ள விரைகின்றனர்; ஆகவே நின்னைச் சரண் அடைந்தேன் (8); நீயோ பிராட்டிமாரும் நித்திய சூரிகளும் விரும்பிப் போற்றும் பெருமையுடையவன்; கழுத்திலே ஓலை கட்டித் துது சென்றமையால் ஏற்றம் பெற்றவன்; திருமறைகளால் போற்றப் பெறுபவன் (9); ஆகவே நின்னைச் சரண் அடைகின்றேன்' என்கின்றார். மேலும் பேசுகின்றார்: தமது புருஷார்த்தம் இன்னது என்பதையும், திருநாட்டில் எம்பெருமானின் தாளிணைக்கீழ் வாழ்ச்சியில் தமக்குப் பிறந்துள்ள பேரவாவையும் விரிவாக விண்ணப்பிக்கின்றார்." "நின்னை அநுபவிப்பதால் உண்டாகும் பேரின்பத்தைத் துறவேன்: நின் திருமேனியின் எழிலை என்றும் மறவேன்: சம்சாரத்தில் பிறக்க எண்னேன்; நினக்கு அடிமைப்பட்டதால் சம்சாரத் தளை நீங்கப் பெற்றேன் (1): உலகப்பொருள்களில் பற்று, அவை கைகூடாவிடில் வரும் சினம், உடலைப்பற்றி வரும் உறவினரின் பற்று இவற்றைக் கைவிட்டேன்; நின் திருவடிகட்கு அடிமை பூண்டேன்; அறமே வடிவெடுத்த நின்னை என் நெஞ்சத்தில் நிலைநிறுத்திக் கொண்டேன் (2): நீயோ குறுங்குடியில் எளியனாயிருப்பவன்; திருநறையூர் தேனாக இனிப்பவன்; மான் போன்ற பார்ன்வயையுடைய மாதர்களின் கண் அம்புக்கு அஞ்சி ஓடிவந்து நின்னைச் சரண் அடைந்தேன் (3); மாதர் இன்பத்தில் மதி கெட்டு மூழ்கினேன்; இதனால் வெந்நரகில் அழுந்தும் பலனைப் பெற்றேன்; நற்பேறாக உய்ந்து நின் திருவடிகளை அடைந்தேன் (4); நின்னையன்றி வேறொரு தெய்வத்தை நினைப்பேனல்லேன்; எல்லோரிலும் மேலானவனான நின்னை என் நெஞ்சில் நிறுத்தி கிடைத்தரியனவற்றைப் பெற்றேன்; சம்சாரத்தில் பிறவாமை யாகிய பேற்றினையும் பெற்றேன் (5); எழுகடல்கள், பூமி, சந்திரன், சூரியன், குலபர்வதங்கள் ஆகியவை யாவும் நீயே, சர்வ சரீரியாகிய நின்னையன்றி 3. மேலது 6.3.