பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிண்ணகர் ஒப்பிலியப்பன் 94 வேறு தெய்வத்தை அறியேன் (6); தேவரீர் சாரமாக ஒன்று சொல்லியருள வேண்டும்; அதற்குமேல் அடியேன் வாய் திறக்க வாய்ப்பு இருக்கக்கூடாது (7); (அஃதாவது ஆழ்வீர், உம்மைத் திருவடி சேர்த்துக் கொண்டேன்'); தேவரீர் பக்கம் நெஞ்சைச் செலுத்தியிருக்கும் அடியேனுக்கு பரமபதம் கிடைக்கும் நாள் எதுவோ அந்நாளை அருளிச் செய்ய வேண்டும் (8); பிராட்டி இணை பிரியாதிருக்கும் போது அடியேனுக்கு என்ன குறை? கருமங்கள் நெருங்காமல் பாதுகாக்க வேண்டும்; அவை தீயில் தூசாகும்படி அருளிச் செய்தல் வேண்டும் (9)' என்று வேண்டுகின்றார். நம்மாழ்வார் திருவிண்ணகரப்பனை அநுபவிப்பதையும் சிந்திக்கின்றோம். இந்த ஆழ்வார் பரத்துவத்தை அர்ச்சையில் காண்கின்றார். உலகில் தம்மில் தாம் சேராத மாறுபட்ட பொருள்கள் யாவற்றிலும் எம்பெருமானுடன் அந்தர்யாமியாய்ச் சேர்ந்திருக்கும்படியைக் கண்டு மகிழ்கின்றார்; வியக்கின்றார். "வறுமை-செல்வம், நரகம்-சுவர்க்கம், பகை-நட்பு, நஞ்சு-அமுது என்று ஒன்றோடொன்று பொருந்தாத பொருள்களாய் விரிந்திருக்கும் எம்பெருமான் என்னை அகப்படுத்திக் கொள்ளவே இங்ங்ணம் இருக்கின்றார்; ஒருவனை அகப்படுத்த நினைத்தார் ஊரை வளையுமாறு போலே (1): இன்பம்-துன்பம், கலக்கம்-தோற்றம், சீற்றம்-அருள், தழல்-நிழல் என்று இவை எல்லாவற்றாலும் கண்டு கோடற்கரியவன் திருவிண்ணகரப்பன் (2); இன்பம் நுகர்ந்திருக்கும் நகரத்திலுள்ளார்-பயிர்த்தொழில் செய்து கொண்டு தேக யாத்திரை நடத்திக் கொண்டிருக்கும் நாட்டிலுள்ளார், அறிவு-அறியாமை, ஒளி-இருள், பூமி-ஆகாயம் என்று இருப்பவன் திருவிண்ணகர்மேய பிரான்(3); புண்ணியம்பாவம், புணர்ச்சி - பிரிவு, நினைவு-மறதி, உண்மை - இன்மை என்று சிறப்பாகத் தோன்றுகின்ற விபூதிகள் யாவும் திருவிண்ணகரப்பன் கருணையால் உண்டாயின (4); வஞ்சனை-நேர்மை, கருமை-வெண்மை, மெய்-பொய், இளமை-முதுமை, புதுமை-பழைமை இவை திருவிண்ண கரப்பன் வைத்து வளர்க்கின்ற சோலைகள் (5); மூன்று உலகங்கள்-பரமபதம், மகிழ்ச்சி-சீற்றம், அவதாரத் திருமேனி, நீண்டநாள் நிலைபெற்றிருக்கும் திருமேனி, வஞ்சனையான காரியங்களைச் செய்பவன் - என்று விண்ணகரில் எழுந்தருளியிருப்பவன் திருவடிகளன்றிப் புகல் ஏதும் இல்லை (7); தேவர்க்குச் சிறந்த புகலிடம் - அசுரர்கட்குக் கொடிய யமன்,