பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'படமுடி யாதினித் துயரம் பட்டதெல்லாம் போதும்' என்ற மன நிலை ஏற்பட்டபோது எம்பெருமான் திருவருள் சுரந்தது. ஒரு சமயம் மானியத்திற்கு விண்ணப்பம் செய்யவே பதிவாளர் மறுத்தார். அப்போது துணை வேந்தராக இருந்த 'வாமன மூர்த்தி' துணை நின்றார். விண்ணப்பமும் அனுப்பப் பெற்றது. எவரை நாடியும் பயனளிக்காத நிலையில் எம்பெருமான் என்னை முன்பின் அறியாத தலைமைச் செயலகத்தில் ஏதோ ஒரு துறையில் இணைச் செயலராகப் பணியாற்றிய திரு. செ.முத்துப் பிள்ளை அவர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தான். தமிழ் வளர்ச்சியில் யான் கொண்டிருந்த துடிப்பையும் பேரார்வத்தை யும் கண்ட பிள்ளையவர்கள் என்மீது கழிவிரக்கம் கொண்டு தாம் முயன்று ஆவன செய்வதாக வாக்கு தந்தார். விரைவில் அரசு ஐந்தாண்டுகட்கு ஐம்பதாயிரம் மானியம் என்ற ஆணையையும் பிறப்பித்தது. 1970-லிருந்து திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் 'தமிழ்த்துறை என்று பெயரளவில் இருந்த துறை வளர்ந்தது. இதற்கு உறுதுணையாக இருந்தவர் துணை-வேந்தர் டாக்டர் டி. சகந்நாதரெட்டி அவர்கள். இந்த அளவில், எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்." என்ற வள்ளுவர் வாக்கின் பொருளை நன்கு உணர்ந்தேன். மீண்டும் கலி' என்னைப் பற்றினான் துணைவேந்தர் உருவில். ரீடராக வேண்டுமானால் ஐந்தாண்டுகள் எம்.ஏ. வகுப்பு கற்பித்த பட்டறிவு வேண்டும் என்ற விதி குறுக்கிட்டது. தமிழகத்திலிருந்து துணைவேந்தர் ஒருவரும், பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் ஒருவரும் நியமனக் குழுவில் அமர்ந்தனர். துணைவேந்தர் ஒரு 'கார்க்கோடகர்'. தமக்குத் தெரிந்த பத்து ஆண்டுகள் எம்.ஏ. கற்பித்த ஒருவரை (அவருக்கு பிஎச். டி. பட்டமும் இல்லை, ஆராய்ச்சி வெளியீடுகளும் இல்லை, எழுத்துப் பழக்கமே இல்லாதவர்) ரீடராகவும் துறைத் தலைவராகவும் கொண்டு வர முயன்றார். ஆனால் எம்பெருமான் காஞ்சி"வரதராசராக நின்று என்னைக் காத்தார். ரீடரானேன். என் முப்பதாண்டு அநுபவம், என் முப்பத்தாறு நூல்கள், பி எச்.டி. பட்டம் எல்லாம் பயனற்றவையாக ஆக்கத் துணிந்தார் தமிழ்த்துணை வேந்தர். என் செய்வது? கடுகுள்ளம்' படைத்தவர்கள் பெரிய இடத்தில் அமர்வதால் ஏற்படும் விளைவு 3. குறள் - 666