பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி சரண் அடைந்தவர்களைக் காத்தல் - அடையா தாரைக் காவாதிருத்தல் என்ற நிலையில் எழுந்தருளி யிருப்பவன் என்னை ஆளும் அப்பன் (8); விண்ணகரான் எனக்கு அப்பன், செவிலித்தாய், நற்றாய், எனக்குப் பொன்னைப் போன்றவன், மணியைப்போன்றவன், முத்தைப் போன்றவன் (9); நிழல் - வெய்யில், சிறுமை - பெருமை, குறுமை - நெடுமை, திரிபவை - நிற்பவை, மற்றும் ஆயவை - அவை அல்லவை என்ற நிலைகளி லுள்ள விண்ணகரப்பனின் திருவடிகளன்றி வேறு ஒரு பற்றுக் கோடும் இல்லை(10)” என்கின்றார். இந்த மனநிலையில் ஒப்பிலியப்பன் சந்நிதியை அடைகின்றோம். என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவனாய் பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப் பனுமாய் மின்னப் பொன்மதின் சூழ்திரு விண்ணகர் சேர்ந்த அப்பன் தன்ஒப்பார் இல்அப்பன் தந்தனன் தனதாள் நிழலே." (இகுளை-செவிலித்தாய்; தன் ஒப்பார் இல் அப்பன் ஒப்பிலி அப்பன்: தாள் - திருவடி) என்பது திருவாய்மொழி. நம்மாழ்வார் இப்பாசுரத்தில் குறிப்பிடும் 'தன் ஒப்பார்இல் அப்பன்'தான் சுருங்கிய முறையில் ஒப்பிலியப்பன். தல மான்மியப்படி உப்பில்லா உணவைத் திருவமுது செய்பவனாதலால் 'உப்பிலியப்பன்' என்றும் வழங்கப் பெறுகின்றான். இப்பாசுரத்தில் குறிப்பிடப் பெற்றுள்ள பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன் என்ற ஐந்து வடிவங்களுடன் ஆழ் வாருக்குக் காட்சி அளித்ததாகத் தெரிகின்றது. இனி, நாம் திருக்கோயிலினுள் நுழைகின்றோம். நுழைந்ததும் நாம் வடபுறத்தில் காண்பது "அஹோராத்திர புஷ்கரிணி." இதற்கு இப்பெயரமைந்தது ஒரு விசித்திரமான கதை. தேவசர்மா என்ற ஓர் அந்தணன், பரத்துவாச முனிவரின் 4. திருவாய். 6.3 : 9.