பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிண்ணகர் ஒப்பிலியப்பன் 93 மரபில் தோன்றியவன். திருமறைகளைக் கரை கண்டவன். ஒரு சமயம் சோலையில் மலர் கொய்து கொண்டிருந்த ஜைமினி முனிவரின் புத்திரியைக் கட்டாயப்படுத்திப் புணர்ந்தான்; அக்கன்னிகை தன் தந்தையின் செவியில்படும்படி கதறினாள். முனிவர் சினந்து தன் புதல்வியைக் கெடுத்த அந்தணனைக் கிரெளஞ்சைப் பட்சியாகுமாறு சபித்தார். தேவசர்மா தான் செய்த குற்றத்திற்கு மிக வருந்தி சாப விடுதலை வேண்டினான். முனிவர் மார்க்கண்டேய கூேடித்திரத்தினுள்ளிருக்கும் பொய்கைக் கரையிலுள்ள ஒரு மரக்கிளையில் தொங்கி நிற்கும்படியும், ஒரு சமயம் புயல் காற்றினால் அக்கிளை ஒடிந்து புஷ்கரிணியில் விழும்போது அதன் புண்ணிய தீர்த்தம் அப்பறவையின்மீது பட்டுச் சாபம் நீங்கும் என்றும் கூறினார். அவ்விதமாக அந்தண இளைஞன் சாபம் நீங்கப் பெற்றான். புண்ணிய தீர்த்தங்களில் இரவு நேரங்களில் நீராடக் கூடாது என்பது பொதுவிதி. அதற்கு விலக்காக இரவில் நீராடிய கிரெளஞ்சப்பட்சி சாபவிமோசனம் பெற்றதால் இந்தப் புஷ்கரிணி அஹோராத்திரி புஷ்கரிணி என்ற திருநாமம் பெற்றது; இப்பெயரால் இன்றும் வழங்கி வருகின்றது. உப்பும் மிளகும் கலந்த கலவையைக் கொண்டு செல்லும் நாம் அதனைக் கருடன் சந்நிதிக்கு முன்புறத்தில் அமைந்துள்ள இரண்டு திருவடிகளில் சேர்த்து அப்பால் செல்லுகின்றோம். (இதனால் சருமநோய் அணுகாது என்று சொல்லப் பெறுகின்றது). கருவறையில் எம்பெருமான் ஒப்பிலியப்பன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கின்றான். கிட்டத்தட்ட எட்டடி உயரம்; கம்பீரமான தோற்றம். பால் வடியும் திருமுகம். திருவரையில் பொன்னாடை, இரண்டு திருக்கைகளில் திருவாழியும் திருச்சங்கும் இலங்குகின்றன. ஒரு கை திருவரையில் பொருந்த, மற்றொன்று மார்க்கண்டேய முனிவரிடம் கன்னிகாதானத்தை ஏற்கும் நிலையில் அமைந்துள்ளன. அழகனுக்கு ஏற்ற அழகுள்ள தாயார் பூமிதேவி. இவர் இருந்த திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய வண்ணம் எழுந்தருளியுள்ளார். மார்க்கண்டேயர் தெற்கு நோக்கி அமர்ந்து கன்னிகாதானம் செய்து கொடுக்கும் கோலத்தில் காட்சி தருகின்றார். இத்திருக்கோயிலில் தாயாருக்கென்று தனிச் சந்நிதி இல்லை. பூமிதேவி நாச்சியாரைப் பிரிந்து பெருமாள் மட்டிலும் தனியாக வெளியில் எழுந்தருள்வது இல்லை. இங்கு நடை பெறும் திருவிழாக்களில் ஐப்பசி மாதம் திருவோணத்தில் தொடங்கிப் பத்துநாட்கள் நடைபெறுவது திருக்கல்யாண