பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. நந்திபுர விண்ணகரத்து நாதன் நம்மாழ்வாரின் நான்கு பிரபந்தங்களும் வேதவியாசரால் வகுக்கப்பெற்ற நான்மறைகளின் தன்மையைப் பெற்றுள்ளன என்ற கருத்தினைச் சிந்திக்கின்றோம். நம்மாழ்வாரின் நான்கு பிரபந்தங்களும் வேதங்கள் நான்கின் தானத்தில் அருளிச் செய்யப் பெற்றுள்ளன ஆசாரிய ஹிருதயத்தில்." இயற்பா மூன்றும், வேதத்திரயம் போலே; பண்ணார்பாடல், பண்புரை இசைகொள் வேதம் போலே." (திரயம் - மூன்று). என்பது ஆசாரிய ஹிருதயம். நாலாயிரத்தில் இயற்பா பிரிவிலுள்ள திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி ஆகிய மூன்று பிரபந்தங்களும், இருக்கு யசுர், அதர்வணம் என்னும் மூன்று வேதங்களின் தானங்களில் கோடல் வேண்டும். 'பண்ணார் பாடல் (திருவாய். 10.7 : 5) என்று சிறப்பிக்கப் பெறும் திருவாய்மொழி சாமவேதத்தின் தானத்திலே கோடல் வேண்டும். 'பண்புரை வேதம்’ (திருவாய். 6.6 : 5) இசைகொள் வேதம்’ (பெரி. திரு 5.3:2) என்ற தொடர்கள் சாமவேதத்தினைக் குறிப்பிடுவனவாகும். திருவாய்மொழி பண்ணையும் இசையை யும் உடைத்தாகையாலே சாமவேதத்துக்குப் பண்ணும் இசையும் உண்டு என்பதனை அறிவித்தவாறு. இந்த எண்ணங்கள் நம் சிந்தையில் குமிழியிட்ட வண்ணம் கும்பகோணத்தில் நாம் தங்கியிருக்கும் விடுதியினின்றும் நந்திபுர விண்ணகரத்திற்குப் புறப்படுகின்றோம். இது கும்பகோணம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து தென்மேற்கு மூலையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. அடிக்கடிப் பேருந்து வசதி இல்லாததால் நாம் ஒரு மாட்டுவண்டியை அமர்த்திக் 1. ஆசா. ஹறி.43. 2. மேலது - 50.