பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நந்திபுர விண்ணகரத்து நாதன் 97 கொண்டு செல்லுகின்றோம். வயல் வெளிகளினுடே குறுக்கும் நெடுக்குமாக அமைந்துள்ள சாலைகளின் வழியாக வண்டி செல்லும்போது இருமருங்கும் உள்ள இயற்கைக் காட்சிகளை அநுபவித்த வண்ணம் செல்லுகின்றோம். நந்திபுர விண்ணகரத்து எம்பெருமானை திருமங்கையாழ்வார் மட்டிலுமே மங்களா சாசனம் செய்துள்ளார். தீதுஅறு நிலத்தொடுளி காலினொடு நீர்கெழு விசும்பும் அவையாய், மாசுஅறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை அவை ஆய பெருமான், தாம்செற உளைந்துதுயிர் உண்டுகுடம் ஆடுதட மார்வர் தகைசேர் நாதன்உறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே." (தீதுஅறு - குற்றம் அற்ற; எரி - நெருப்பு: கால் - காற்று; கெழு - சிறந்த; விசும்பு - ஆகாயம்; இறக்கை - மரணம்; செற - சீற்றம் கொள்ள: உளைந்து - நடுங்கி; மார்வர் - மார்பை உடையவர்; தகை - அருள்) என்ற பாசுரம் தொடங்கிப் பத்துப் பாசுரங்களால் மங்களா சாசனம் நடைபெறுகின்றது. 'நந்தி பணி செய்த நகர் நந்திபுர விண்ணகரம்’ ஆகும். திருவல்லிக்கேணியில் தென்னன் தொண்டையர்கோன் போலவும் (பெரி. திரு. 2.3 : 1.1), பரமேச்சுர விண்ணகரத்தில் பல்லவன் மல்லையர்கோன் போலவும் (மேலது 2.9 : 1.0), அட்ட புயகரத்தில் வயிரமேகன் போலவும் (மேலது 2.8 : 1.0), திருநறையூரில் கோச்செங்கணான் போலவும் (மேலது 6.6 : 1, 4) இத்திருப்பதியில் நந்திவர்மன் என்னும் ஒர் அரசன் சில திருப்பணிகள் செய்தனனாக அறியக் கிடக்கின்றது. நந்தி தேவர்க்குக் காட்சி தந்த நகரமாதல்பற்றி நந்திபுர விண்ணகரம் என்று திருநாமம் பெற்றதாகவும் உரைப்பர். இப்பாசுரத்தில் இறுதியடியிலுள்ள 'நாதன் உறைகின்ற நகர்’ என்ற சொல்றொடரால் இத்திருப்பதி நாதன் கோயில்’ என்ற திருப்பெயரால் பெருவழக்காக அறியப்பெறுகின்றது. பாசுரங் கள் தோறும் நந்திபுர விண்ணகரத்தை நாடுமாறு மனத்தை ஆற்றுப் படுத்துகின்றார் ஆழ்வார். 3. பெரி. திரு. 5.10:1 சுப்பு - 8