பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நந்திபுர விண்ணகரத்து நாதன் 99 ஒடுங்கும்படி வியத்தகு முறையில் திருவமுது செய்தவன் (2); இவ்வாறு உண்ட உலகங்களைப் படைப்புக் காலத்தில் வெளிப்படுத்தியவன் (3); அசுரர்களைக் கொன்று குவித்து வெற்றி கொண்ட பெருமான் (4); சுதர்சனம் (திருவாழி). கெளமோதகி (கதை), பாஞ்ச சன்னியம் (திருச்சங்கு), நாந்தகம் (வாள்), சார்ங்கம் (வில்) ஆகிய ஐந்து ஆயுதங்களைத் திருக்கையில் ஏந்தியவன் (5); தம்பியுடனும், துணைவியுடனும் வெம்பி எரி கானகத்தில் உலாவித் திரிந்த காகுத்தன் (6): புத்திரனில்லையே என்று கவன்ற நந்தனின் சோகம் தீரும்படி மதுரையினின்றும் ஒருவருக்கும் தெரியாமல் ஆய்ப்பாடிக்கு வந்து சேர்ந்த பெருமிடுக்கன் (7): தியானத்திற்குத் தகுந்த மூர்த்தியாக நந்திபுர விண்ணகரத்தில் திருக்கோயில் கொண்ட நாதன் (8); இந்த எம்பெருமானின் திருவாணையைச் சிரசாக வகிக்கும் பக்தர்கள் ஊழிப் பெருவெள்ளத்திலும் தம் உடல்கள் அழியப் பெறார் (9); இங்ங்னம் எம்பெருமானுடைய பெருமைகளைப் பேசிய ஆழ்வார் தம் மனத்தை நோக்கி 'நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே" என்று ஒரு தடவைக்கு ஒன்பது தடவையாகப் பன்னி யுரைக்கின்றார். இங்ங்னம் பாசுரங்களில் ஆழங்கால் பட்ட வண்ணம் திருக்கோயிலினுள் நுழைகின்றோம். விண்ணகரப் பெருமாள் என்றும், சகந்நாதன் என்றும், நாதப்பெருமாள் என்றும் திருநாமங்களுடன் வழங்கப் பெறுகின்ற இத்திருத்தலத்து எம்பெருமான் மேற்கு நோக்கிய திருமுக மண்டலங் கொண்டு இருந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றான். தாயாரின் திருநாமம் சண்பகவல்லி என்பது. இருவரையும் சேவித்து இவர்தம் திருவருளைப் பெறுகின்றோம். இவர்தம் பாசுரங்களைச் சேவிக்க வல்ல 'அடியவர்கள் கொடு வினைகள் முழுதும் அகலுமே” என்ற பல சுருதிப் பாசுர அடியின் பகுதியையும் சிந்திக்கின்றோம். நாம் வந்த சமயம் திருக்கோயிலில் கூட்டம் அதிகமில்லாததால் பத்துத் திருப்பாசுரங்களையும் எம்பெருமான் திருமுன் மிடற்றொலி கொண்டு சேவித்து மனநிறைவு பெறுகின்றோம். இந்நிலையில் திவ்விய கவியின் திருப்பாசுரமும் நினைவிற்குவர, அதனையும் சேவிக்கின்றோம். செயற்கரிய செய்வோமைச் செய்யாமல் நன்னெஞ்சே! மயக்குவார் ஐவர் வலியால் - நயக்கலவி