பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி சிந்திபுர விண்ணகரம் என்பர்திருச் செங்கண்மால் நந்திபுர விண்ணகரம் நாடு" (செய்வோமை - செய்யவல்ல நம்மை; செய்யாமல் - செய்யலொட் டாமல்; கலவி சிற்றின்பம்; சிந்தி நினைப்பாய்; விண்ணகரம் - சுவர்க்க லோகம்; புர - அரசாள்வாய்; நாடு - விரும்பு) என்பது பாசுரம். 'தவம் முதலிய அரும்பெருந் தொழிலைச் செய்ய வல்ல நம்மை ஐம்பொறிகள் நற்றொழில் ஒன்றையும் செய்யவொட்டாமல் மயக்கிச் சிற்றின்பத்திலேயே வலிய இழுக்கின்றன. மனமே, நீ அவற்றின் வழிப்படாமல் எம்பெரு மான் எழுந்தருளியிருக்கும் நந்திபுர விண்ணகரத்தை நாடு தலாகிய இச்சிறு தொழிலை மேற்கொண்டாலும் பேரின்பம் கைகூடும்’ என்று தம் மனத்திற்கு அறிவுரை தருகின்றார் அய்யங்கார். மன நிறைவினைத் தரும் இந்தச் சிந்தனைகளுடன் நம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றோம். 4. நூற். திரு. அந்.21.