பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. நறையூர் நின்ற நம்பி மேதாவி என்ற திருநாமம் கொண்ட மனிவர் ஒருவர் திருநறையூர் என்ற திருத்தலத்தில் தவம் செய்து வருகின்றார். திருமகள் தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்ற பேரவாக் கொண்டிருக்கின்றார் அம்மாமுனிவர். அவர் விருப்பப்படியே முனிவரது தவச் சாலையின் அருகில் வஞ்சுள மரத்தடியில் ஒரு சிறு பெண்குழவியாக அவதரிக்ககின்றாள் பெரிய பிராட்டியார். முனிவர் அக்குழந்தையை எடுத்து வஞ்சுள வல்லி என்று திருநாமம் இட்டு வளர்த்து வருகின்றார். அக்குழந்தையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து மங்கைப் பருவம் அடைகின்றது. எம்பெருமானும் 'அகல கில்லேன் இறையும்’ என்று சொல்லிக் கொண்டு தன் திருமார்பில் வதியும் எம்பெருமாட்டியைத் தேடிக் கொண்டு இப்பூவுலகிற்கு வருகின்றான்: அவன் தனி ஒற்றை ஆளாக வரவில்லை. சங்கர் ஷணன், பிரத்தியும்நன், அநிருத்தன், புருஷோத்தமன், வாசுதேவன் என்ற ஐந்து உருவத்தாங்கி வருகின்றான். இந்த ஐந்து வியூகப் பரமர்களையும் மேதாவி முனிவரது சீடர்கள் மணிமுத்தாற்றங் கரையில் சந்தித்து முனிவரது ஆசிரமத்திற்கு அழைத்து வருகின்றனர். ஐவரையும் அதிதிகளாக ஏற்று விரும்தோம்புகின்றார் முனிவர். ஐவரில் நடுநாயகமாக அமைந்த வாசுதேவரின் கண்கள் முனிவர் மகள் வஞ்சுள வல்லியின் கண்களைச் சந்திக்கின்றன. கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல’ என்றல்லவா சொல்லி வைத்திருக்கின்றார் வள்ளுவப் பெருந்தகை? ஐவரும் உணவு அருந்தி விட்டுக் கைகழுவச் சென்ற பொழுது வஞ்சுளவல்லி தண்ணிர் கொண்டு வருகின்றாள். வாசுதேவன் அவள் கையை பற்றுகின்றான். 'அப்பா இவர் ஒருவர் செய்தது காண்’ என்கின்றாள் அத்திருமகள். ஒடி வந்த மேதாவி முனிவர் தம் மகள் கையைப் பிடித்த நிலையில் வாசுதேவனைக் காண்கின்றார். அவனது அடாத செயலைக் கண்டு சீற்றம் கொள்ளுகின்றார். சாபம் கொடுக்கவும் முனைகின்றார். இந்த இக்கட்டான நிலையை