பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி யுணர்ந்த வாசுதேவன் திருவாழி திருச்சங்கு ஏந்திய வண்ணம் தன் உண்மைத் திருக்கோலத்தைக் காட்டி நிற்கின்றான். வந்திருப்பவன் திருமகள் கொழுநனே என்று அறிந்ததும் முனிவரது சீற்றம் போன இடம் தெரியவில்லை. வஞ்சுளவல்லி-வாசுதேவன் திருமணம் நடைபெறுகின்றது. அந்தத் திருமணக் கோலத்துடன் வாசுதேவன் நறையூர் நம்பியாக நின்றருள்கின்றான். திருமணத்திற்கு முன்பதாகவே மேதாவி முனிவர் வாசுதேவனிடம் மூன்று வரங்களைப் பெறுகின்றார். ஒன்று தமக்குப் பிறப்பு-இறப்பு வட்டம் இல்லாத பேறு, இரண்டு நறையூரில் வாழும் உயிர்கட்கெல்லாம் விண்ணகர வாழ்வு, மூன்று நறையூரில் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளிலும் வஞ்சுளவல்லிக்கே முதன்மை இடம் என்பவை அவை. வாசுதேவன் முனிவருக்கு மூன்று வரங்களையும் நல்குகின்றான். திருமணம் நடந்த அன்று முதல் நறையூர் என்ற திருபெயரும் "நாச்சியார் கோயில் என்ற புதுப்பெயர் பெற்றுத் திகழ்கின்றது. நறையூர் நம்பியும் 'மணாட்டிக்கு அடங்கிய Lo 6RTT6n 6ormes Geni (Henpecked husband) @#$c5$360$$eb தங்கிவிடுகின்றான். இந்த எண்ணங்கள் நம் மனத்தில் குமிழியிட்ட வண்ணம் 'நாச்சியார் கோயில்’ என்று வழங்கும் திருநறையூருக்குப் புறப்படுகின்றோம். கும்பகோணத்திலிருந்து இத்திருத்தலம் திருவாரூர் செல்லும் நெடுங்சாலையில் சுமார் பத்துக்கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. திருவாரூரிலிருந்தும் வரலாம். அடிக்கடிப் பேருந்து வசதி உண்டு. திருநறையூரில் சித்திச்சுரம் என்ற புகழ்பெற்ற சிவன் கோயிலும் உண்டு. சாதாரணமாக சைவப்புராணங்களிலும் சைவ பக்திப் பனுவல்களிலும் சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கூறும்போது நாராயணன் சிவனை வணங்கி 'அது, இது பெற்றனவாகக் கதைகள் உள்ளன. அங்ங்னமே வைணவப் புராணங்களிலும் வைணவ பக்திப் பனுவல்களிலும் நாராயணனுக்குப் பரத்துவம் சொல்லப்பெறும் பொழுது, தோசையைப் திருப்பிப் போட்ட மாதிரி, சிவபெருமான் நாராயணனை வணங்கிச் சிலவற்றைப் பெற்றான் என்ற கதைகள் உள்ளன. நறையூர் நம்பியைத் திருமங்கையாழ்வார் ஒருவரே 109 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார் (இந்த ஆழ்வார் 100க்கு மேற்பட்ட பாசுரங்களால் மங்களா சாசனம் செய்த மற்றோர் எம்பெருமான் திருக்கண்ணபுரத்து செளரிராஜன்)