பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நறையூர் நின்ற நம்பி 103 ஆறும் பிறையும் அரவமும் அடர்பும் சடைமேல் அணிந்துஉடலம் நீறும் பூசி ஏறுஊரும் இறையோன் சென்று குறையிரப்ப, மாறுஒன்று இல்லா வாசநீர் வரைமார்வு அகலத்து அளித்துகந்தான் நாறும் பொழில்சூழ்ந்து அழகுஆய நறையூர் நின்ற நம்பியே (6.7:9) (ஆறு - கங்கை; பிறை - சந்திர கலை; அரவம் - பாம்பு; அடம்பு - ஒரு வகை மலர் நீறு - விபூதி, ஏறு-இடபம்; மாறு ஒன்று இல்லா - ஒப்பற்ற: வரை மார்பு - மலை போன்ற மார்பு நாறும்-நறுமணம் வீசும்; பொழில்சோலை) என்ற பெரிய திருமொழிப் பாசுரத்தில் மேற்குறிப்பிட்டவாறு ஒரு கதை வந்துள்ளது. ஒரு காலத்தில் பரமசிவன் தன்னைப் போலவே நான்முகனும் ஐந்து தலைகளையுடைய வனாயிருப்பது பலரும் பார்த்து மயங்குவதற்கு இடமாயிருக்கிற தென்று கருதி அவனது தலை யொன்றினைக் கிள்ளி எடுத்துவிட்டான். பிரம கபாலம் அவன் கையில் ஒட்டிக் கொண்டது. இதனால் மிகவும் கவலையுற்றான் சிவன். தேவர் களும் முனிவர்களும் இப்பாவம் தொலையப் பிச்சை எடுக்க வேண்டும்; என்றைக்கு இக்கபாலம் நிறையுமோ அன்றைக்குத் தான் இது கையைவிட்டு அகலும் என்றனர். சிவன் பல காலம் பல தலங்களில் பிச்சையேற்றுத் திரிந்தும் அக்கபாலம் நிறைந்திலது. பின்னர் பதரிகாச்சிரமத்தில் எழுந்தருளிய நாராயணமூர்த்தி தனது திருமார்பிலுள்ள (வியர்வை) நீரை (மார்பைக் கீறிக் குருதியை) எடுத்து இட்டதால் கபாலம் நிறைந்து, அது சிவன் கையை விட்டு அகன்றது என்பது வரலாறு. இந்த வரலாறு நறையூர் நம்பிமீது ஏற்றியுரைக்கப்பெற்றது எல்லா அர்ச்சை எம்பெருமான்களும் (ஏனைய நான்கு நிலை எம்பெருமான்களும்) ஒருவரே என்ற வைணவ சமய உண்மையை வற்புறுத்துவதற்காக. திருவிண்ணகர் எம்பெருமானை அநுபவிக்கும் ஆழ்வார் இடையில் 'திருநறையூர்த்தேனே' என்று கூறுகின்றார். இதற்குப் பொருள் கூறின பராசரபட்டர், 'திருநறையூர்ப் பெருக்குக்குச் சினையாறு படுகிறது கிடாய்!” என்று அருளிச் செய்வர் என்பது பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியான பூரீஸ் லக்தி. இதன் அழகிய கருத்து என்னே எனின்: திரு