பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி இது. இவ்வாறு பட்டர் விளக்கம் தந்தவுடனே பிள்ளை திருநறையூரரையர் 'ஆராய்ந்து குற்றம் நிரம்பினால் பின்னையன்றோ தண்டிப்பது?’ என்று கூற, பட்டர் என் செய்வோம்? கேள்வியிலாதபடி பெண்ணரசு நாடாய்த்தே!’ என்று அருளிச் செய்தாராம். இதனால் நாச்சியார் கோவில்' என்ற புகழ் பெற்ற பெயரைக் குறிப்பிட்டவாறாம் (இவ்வூரில் எல்லாவற்றிற்கும் பிராட்டிக்கே முதலிடம். திருவீதிப் புறப்பாடு களில் நாச்சியார் முன்னே எழுந்தருள்வதும் எம்பெருமான் பின்னே எழுந்தருள்வதுமாயிருக்கும். ஆணரசு நாடாகில் கேட்பாருண்டு; பெண்ணரசு நாடாதலால் கேட்பாரில்லை என்று சுவைபடக் கூறியதாம்). நிலவளத்தைப் பேசிய ஆழ்வார் நறையூரின் நீர் வளத்தையும் குறிப்பிடுவர். இப்பகுதியைப் பொன்னி எனப் படும் காவிரி நதி பாய்ந்து வளமாக்குகின்றது. காவிரி நதி உழப்படு கின்ற கழனிகளின் வரப்புகளின்மீது மலைப் பகுதிகளிலுள்ள இரத்தினங்களைக் கொணர்ந்து சிதறித் தள்ளுகின்றது. அவற்றுடன் சந்தனக் கட்டைகளையும் அகிற்கட்டைகளையும் எவரும் எடுத்துக் கொள்ளும்படியாகக் கொண்டு வந்து தள்ளுகின்றது (6.6 : 2, 5.7); பொன்களையும் முத்துகளையும் சிங்க நகங்களையும் குளிர்ந்த அலைகளின் மூலமாகக் கொழிக்கின்றது (6.9:6); நறையூரின் அருகிலுள்ள நிலத்தில் கரும்பும் செந்நெலும் போட்டி போட்டு வளர்ந்து பயன் தருகின்றன (6.6:7); நறையூர்ச் சோலைகளில் பாக்குக் குலைகள் குவிந்து காணப் பெறுகின்றன (6.6:8). நறையூரின் சிறப்பைப்பற்றியும் பேசுகின்றார் ஆழ்வார். இவ்வூரில் வாய்மையுள்ள அந்தணர்கள் அதிகமாக வாழ் கின்றனர் (6.5:1); நான்மறைகளை முறையே ஓதி சோம வேள்விகளை நடத்துவதையே கடமைகளாகக் கொண்ட அந்தணர்களும் அங்கு நிரம்பியுள்ளனர் (6.7:5); நான்கு மறைகள், ஐந்து வேள்விகள், ஆறு வேதாங்கங்கள், ஏழு இசை இவற்றைப் பொழுது போக்காகக் கொண்ட மறையோரும் அங்கு வாழ்கின்றனர் (6.7:7); வள்ளண்மை வாய்ந்த பார்ப்பனர்களும் அங்கு மிகுதியாக வாழ்கின்றனர் (6.7:8). நறையூர் நம்பியின் பெருமைகளைப்பற்றிப் பேசும்போது ஆழ்வாரின் பக்தி வெள்ளம் கரைபுரண்டோடுகின்றது. முதலில்