பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நறையூர் நின்ற நம்பி 107 எம்பெருமாளின் திருமேனியைச் சிந்திக்கின்றார் ஆழ்வார். 'பவ்வநீர் உடைஆடை ஆகச் சுற்றி பார் அகலம் திருவடியா, பவளம் மெய்யா, செவ்விமா திரம்எட்டும் தோளா, அண்டம் திருமுடியா நின்றான். (6.6:3) (பவ்வம் - கடல்; பார் - பூமி, பவனம் - காற்று; செவ்வி - அழகிய; மாதிரம்- திசைகள், அண்டம்-அண்ட பித்தி) 'விபுவான எம்பெருமானுக்குக் கடல் திருவரையில் உடுக்கும் ஆடையாகின்றது. நிலப் பரப்பெல்லாம் திருவடியாகின்றது; வாயு மண்டலம் முழுவதும் (ஏன்? விண்வெளி முழுவதும்) திருமேனியாகின்றது; திசைகளெட்டும் திருத்தோள்களாகின்றன; அண்டகடாகம் திருவ பிஷேக மாகின்றது' என்று உலக வடிவமாக இருக்கும் நிலையை உருவகத்தாலே அநுபவிக்கின்றார். இத்திருமேனி இன்னோர் பாசுரத்தில், 'நின்ற வரையும் கிடந்த கடலும் திசையும் இரு நிலனும் ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி நின்ற அம்மானார். (6.10:7) (வரை - மலை; இரு நிலம் - பரந்த பூமி, ஒன்றும் - சிறிதும்: ஒழியாவண்ணம் - பாழகாதபடி) என்று காட்டப் பெறுகின்றது. அசித்தும் இறைவன் திருமேனி யாகவுள்ளது என்ற வைணவ தத்துவத்தின் சரீர-சரீரி பாவனை ஈண்டுக் காட்டப் பெறுகின்றது. இங்ங்னம் பரத்துவ நிலை யிலுள்ள எம்பெருமானே நறையூர் நின்ற நம்பியாக உள்ளான் என்பது ஆழ்வார் கருத்தாகும். அடுத்து, எம்பெருமானின் அவதாரச் செயல்களில் இழிகின்றார் ஆழ்வார். கடலைக் கடைந்து தேவர்கட்கு அமுதம் ஈந்தருளியவன்; பரம பாகவதனான பிரகலாதனுக்கு நேர்ந்த இடர்களைப் பொறுக்கமாட்டாது நரசிங்க மூர்த்தியாகத் துணில் தோன்றி இரணியனின் முரட்டு மார்பைத் திருநகங்களால் பிளந்தெறிந்த புனிதன்; மச்சாவதாரம் எடுத்து ஹயக்ரீவன் அபகரித்துச் சென்ற திருமறைகளை மீட்டு நான்முகனிடம் அளித்தவன்; பரசுராமனாக அவதரித்து கூடித்திரியர்களை