பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி இருபத்தொரு தலைமுறை ஒழித்த திருத்தோளன்; வாணனின் ஆயிரத்தோள்களாகிய காட்டை அறுத்துத் திருவுள்ளம் உவந்தவன்; வாமன மாணியாக வந்து மாவலியிடம் மூவடி மண் இரந்து பெற்று, திரிவிக்கிரமனாக வளர்ந்து மூவுலங்களையும் தனதாக்கிக் கொண்டவன்; இராவணனைத் தொலைத்து வீடணனுக்கு இலங்கையரசை நல்கியவன்; வராக அவதாரம் எடுத்துப் பூமியை அண்டபித்தியினின்றும் விடுவித்தெடுத்த பெருமான். கிருஷ்ணாவதாரத்தில் இந்த ஆழ்வாருக்கு மிக்க ஈடுபாடு உண்டு. ஆகவே அந்த அவதாரத்தைப் பல்வேறு நிலைகளில் அநுசந்தித்து அகம் மிக மகிழ்கின்றார். உறியார்ந்த வெண்ணெய் உண்டு உரலில் கட்டுண்டல், ஏழ்விடை வென்று பின்னையை மணத்தல், பூதனையிடம் பால் உண்ணும் வியாஜத்தால் அவள் உயிரையும் உண்ணல், இரட்டை மருத மரங்களைச் சாய்த்தல், பார்த்தனுக்குத் தேரூர்ந்து பாரதப்போரை நடத்துதல், குவலயா பீடம் என்ற யானையை முடித்தல், மல்லர்களை மாய்த்தல், கன்றுகள் மேய்த்துக் குழலுதல், காளியனை அடக்குதல், கஞ்சனை மாய்த்தல், கோவர்த் தனத்தைக் குடையாக எடுத்துக் கல்மாரி காத்தல், குதிரை வடிவாய் வந்த கேசியைத் தொலைத்தல், காண்டவத்தைத் தீ மூட்டல், கொக்கு உருவங்கொண்டு வந்த பகாசுரனைப் பிளந்து மாய்த்தல் போன்ற கண்ணனின் தீரச் செயல்களை யெல்லாம் நினைந்து போற்றுவர். இங்ங்னம் செயற்கரியனவற்றைச் செய்த பெருமானே நறையூர் நின்ற நம்பி. இவற்றைத் தவிர வியூக மூர்த்தியாக நின்று அருஞ்செயல் புரிந்தவற்றையும் அநுசந்திக்கின்றார். பாலனாகி ஏழு லண்டு ஆலிலை மேல் அறிதுயில் கொண்டவன்; 'ஆதி மூலமே!’ என்று கூவியழைத்த கஜேந்திரன்முன் தோன்றி அவன் சமர்ப்பித்த 1008-வது தாமரை மலரை ஏற்று முதலையைக் கொன் றொழித்தவன்; பாற்கடலைக் கடைந்து விண்ணவர் அமுதுண அளித்துப் பெண்ணமுதாம் பெரிய பிராட்டியைத் தான் கொண்டவன்; அன்னமாய் வந்து அருமறைகளை ஒதுவித்து அவற்றைக் காத்தவன். இங்ங்னம் பேசியவர் நெஞ்சிற்கும் பிறருக்கும் உபதேசிக்கத் தொடங்குகின்றார். திருநறையூர் நம்பி சந்நிதி ‘மணிமாடக்கோயில்’ என்று வழங்கிவந்ததாகத் தெரிகின்றது. செம்பியன் கோச்செங்கணான் என்னும் ஒரரசன் நம்பிக்குத்